திருச்சி என்றால் திமுகவுக்கு திருப்புமுனை! நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு 26ஆம் தேதி பிள்ளையார்சுழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு வரும் 26ஆம் தேதி திருச்சியில் பிள்ளையார்சுழி போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருச்சி என்றாலே திமுகவுக்கு திருப்புமுனை தான் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

திருச்சி என்றாலே திருப்புமுனைதான் என்று சொல்லும் அளவிற்குக் கழகத்தின் பல்வேறு மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றுள்ளன. கழகம் தேர்தல் களம் காண்பதற்குத் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்த வாக்கெடுப்பின் முடிவின்படி, 1957ல் முதன்முறையாகத் தேர்தல் களம் கண்டதற்கு அடிப்படையாக அமைந்தது 1956 ல் திருச்சியில் நடைபெற்ற கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.

Chief Minister Stalin will put pillaiyar suzhi in Trichy on 26th coming up for parliamentary election works

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புகூட திருச்சி சிறுகனூரில் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் மாபெரும் அளவில் - மகத்தான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று, கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

திருப்புமுனை தரும் திருச்சி என்றாலே நேரு தான் என்று சொல்வதுபோல் நமது கழக முதன்மைச் செயலாளர் சிறப்பாக அந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதேபோல் இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டமும் திருச்சியில் தொடங்கவுள்ளது.

டெல்டா என்றவுடனே நேருவிடம் தான் கூறினேன். அவரும் நாள்தோறும் அந்தக் கூட்டம் குறித்து என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உறுதுணையாகத் தலைமைக் கழகத்தின் சார்பில், அன்பகம் கலை, ஆஸ்டின் மற்றும் தாயகம் கவி ஆகியோரும் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

Chief Minister Stalin will put pillaiyar suzhi in Trichy on 26th coming up for parliamentary election works

திருச்சியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பாசறையில், முதன்மைச் செயலாளர் நேரு வரவேற்புரை ஆற்றவுள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில் கழக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கம் கழக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் செயலாளர் அப்துல்லா எம்.பி., அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் சிவசங்கர் அவர்கள், அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும், சமூக வலைத்தளங்கள்- பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் குறித்து கழக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தியு ம் விரிவாக விளக்கவுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+