லண்டன் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்! ஏர்போர்ட்டில் வரவேற்ற தவெகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்துகொண்டு இன்று தமிழ்நாட்டுக்குத் திரும்பினார் முதலமைச்சர் ஜோசப் விஜய். சென்னை விமான நிலையத்தில் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கடந்த 10ஆம் தேதி இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Vijay london tvk

மேலும், லண்டன் சென்ற முதல்வர் விஜய், அங்கு நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் அஜித் குமார் உடன் அளவளாவினார். விஜய்யை அமர வைத்து கார் ஓட்டினார் அஜித் குமார்.

அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். விஜய் நேற்று லண்டனில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக, அவரை சந்திக்க ரசிகர்கள் மீண்டும் திரண்டிருந்தனர். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும், ஆட்டோகிராப் வாங்குவதற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பலருக்கும் முதலமைச்சர் விஜய் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதனையடுத்து முதலமைச்சர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார். முதலமைச்சர் விஜய் இன்று காலை 8.05 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து, காரில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். முதல்வர் விஜய் வருகையையொட்டி விஐபி கேட் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+