அம்பேத்கரை ஈர்த்த வைக்கம் போராட்டம்.. சென்னையில் நூற்றாண்டு விழா!.. பெரியாருக்கு மரியாதை
சென்னை: வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு சிறப்பு விழா இன்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலையும் வெளியிடுகின்றனர்.
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து, 1924-ஆம் ஆண்டு அங்கு மிகப் பெரிய போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது, போராட்டத்தை தொடர்ந்து நடத்த, போராட்டக்குழு தலைவர்கள் தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுத்தனர்.

அதனையேற்று, வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இதனால், தந்தை பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். முதல் முறை ஒரு மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் அவருக்கு தண்டனை அளிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை யில் கால்களிலும், கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர் சிரமபடுத்தப்பட்டார்.
இந்த நிலையில், திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். தந்தை பெரியாருடன் சமாதானம் செய்து கொண்டு, வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையை ராணி நீக்கினார். ஆனால், தந்தை பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவும் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம் ஆகும்.
"வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது" என்று அம்பேத்கர் கூறியுள்ளார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்ட வெற்றியின் 100 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரையும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் 'பெரியாரும் வைக்கம் போராட்டமும்' என்ற நூலையும் வெளியிடுகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைக்கம் போராட்ட வெற்றியின் 100-ஆம் ஆண்டினை குறிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா 28.12.2023 அன்று வியாழன் காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும்.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்துகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் "பெரியாரும் வைக்கம் போராட்டமும்" என்ற நூலை வெளியிட்டு முன்னிலையுரை ஆற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழாவில் சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவின்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை தயாரித்துள்ள வைக்கம் போராட்டம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications