நள்ளிரவு நேரம்.. யாருமே எதிர்பார்க்காத போது.. திடீரென ஸ்பாட்டிற்கு சென்ற இறையன்பு! அதிரடி ஆய்வு
சென்னை: தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே தலைமைச் செயலாளர் இறையன்பு சாலை பயணிகளை திடீரென ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் சின்ன மழை என்றாலும் கூட வாகன ஓட்டிகள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இதையடுத்து சென்னை நாகரட்சி சாலை சீரமைக்கும் பணிகளை இப்போது மேற்கொண்டு வருகிறது. இதன்படி நடைபெற்ற பணிகளின் போது தான் நேற்று திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை
சென்னையில் பிரதான சாலைகள் தவிர்த்து மற்ற பல சாலைகள் மோசமாக இருப்பதாகக் கடந்த காலங்களில் புகார்கள் வந்துள்ளன. சின்ன மழைக்கும் சாலைகளில் தேங்கும் நீரே இதற்கு உதாரணம். அதேபோல புதிதாக அமைக்கப்படும் சாலைகளும் கூட தரமாக அமைக்கப்படுவது இல்லை என்றும் ஏற்கனவே இருக்கும் சாலைகளுக்கு மேலேயே ரோட்டை போட்டுவிடுவதாகப் புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

சாலைகள்
இதற்கிடையே இந்த பிரச்சினைகளைச் சரி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகளைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று இருக்கிறது. மாநகராட்சியில் இருக்கும் 405 சாலைகளா புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பழைய சாலைகள் சுரண்டப்பட்டு, மேலே தார் ஊற்றி தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதி தெருக்கள், மாநகரப் பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

சாலைப் பணிகள்
அடுத்து ஆறு மாதங்களில் மட்டும் 204.8 கிலோமீட்டர் நீளத்திற்கு மொத்தம் 1,157 சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் முத்தமிழ் நகர்ப் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ.13.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வாகன போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்பதால் இவு நேரங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

தலைமைச் செயலாளர் இறையன்பு
இரவு நேரத்தில் பழைய சாலைகளைப் பெயர்த்து எடுத்துவிட்டு, அதற்கு மேலே புதிய சாலைகள் அமைத்து வருகின்றனர். இந்த சாலைகள் போதிய தரத்துடன் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். இதற்கிடையே தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த பணிகளில் நேற்று நள்ளிரவு திடீரென ஆய்வு செய்தார். இதனால் அங்கு அதிகாரிகள் மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஆய்வு
அப்போது அவர் சாலைகள் சுரண்டப்பட்ட அளவு, புதிய சாலை தரம், சாலைகளின் மொத்த அளவு, கலவையின் தரம் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தார். மேலும், சாலைகள் தரமாக அமைக்கப்படுவதை அவர் உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது தலைமைச் செயலாளருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications