எச்சரித்த அண்ணாமலை! அலர்ட் ஆன திமுக அரசு! ஸ்வீட் டெண்டர் இனி ஆவினுக்குத் தான்! இறையன்பு உத்தரவு!
சென்னை: அரசு துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்புகளையே வழங்க வேண்டும் என அனைத்து துறை அரசு செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்க விரும்பினால் ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைமைச் செயலாளரின் இத்தகைய அறிவுறுத்ததால், அரசு ஒப்பந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த பிரபல இனிப்பக நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

அலுவல் கூட்டங்கள்
அரசுத்துறை சார்ந்த அலுவலக கூட்டத்தின் போது, அதில் கலந்து கொள்பவர்களுக்கு ஸ்வீட், காரம், தேநீர் தண்ணீர்பாட்டில் உள்ளிட்டவைகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான ஆர்டர் பிரபல இனிப்பக நிறுவனங்களுக்கு உரிய அதிகாரிகள் மூலம் கொடுக்கப்படும். இந்நிலையில் இந்த நடைமுறைக்கு மூடுவிழா நடத்தும் வகையில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆவின் இனிப்பு
அதில் ஆவின் இனிப்புகளையே அரசு துறை சார்ந்த அலுவல் கூட்டங்களுக்கும், தீபாவளி பண்டிகைக்கு ஊழியர்களுக்கு வழங்குவதற்கும் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஆவின் இனிப்புகளை பொறுத்தவரை அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்டவைகள் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பால் பொருட்கள்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் விற்பனை போக 27 லட்சம் லிட்டர் பால் பாக்கெட் பாலாகவும், மீதமுள்ள பால் மூலம் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப் ஜாமுன், ரசகுல்லா, சாக்லெட், ஐஸ்கிரீம், உள்ளிட்ட பால் பொருட்கள் உயர்ந்த தரத்தில் ஆவினில் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைவு
மேலும், வெளியில் வாங்கக்கூடிய இனிப்புகளின் விலையை காட்டிலும் ஆவினில் இனிப்புகளின் விலை குறைவு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, காஜூகத்லி, நட்டி மில்க் கேக், மோதி பாக், காஜூ பிஸ்தா ரோல், மில்க் பர்பி, ஆகிய 5 வகையான இனிப்புகள் அடங்கிய அரைகிலோ தொகுப்பு ரூ.425 தான் என விலைப்பட்டியலையும் இணைத்துள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

இனிப்பு கடை
அண்மையில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கார்ப்பரேட் இனிப்பு கடை நிறுவனம் ஒன்றில் தீபாவளி இனிப்பு ஆர்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்தது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இது குறித்து வெளிப்படையாக ட்விட்டரில் புகார் அளித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் குடும்ப உறவுகளால் ஆட்சிக்கு அவப்பெயர் என்ற சூழல் உருவானது. இதையடுத்து முதலமைச்சர் இதில் தலையிட்டதால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு ஆவினுக்கு கொடுக்கப்ட்டது. இந்நிலையில் தலைமைச் செயலாளர் ஆவின் இனிப்புகளை மட்டும் வாங்குங்கள் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அரசு டெண்டர் மூலம் காசு பார்க்க நினைத்த பிரபல இனிப்பு கடை நிறுவனங்கள் தான் தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications