குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை.. வெற்றிக்கு எதிரான வழக்கு! ஐகோர்ட்டில் விஜய் மனு
சென்னை: குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவில்லை என முதல்வர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதாக கூறி தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதை மறைத்ததாக கூறுவதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜய், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.

விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய விஜய் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
கூடுதல் நாள் அவகாம் கோரப்பட்டதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து இருந்தது. இதையடுத்து, விஜய் தரப்பில், தனது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவில்லை.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதை மறைத்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறிய குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறி வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது. தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளை பயன்படுத்த தடை விதித்து கடந்த 2024 ஆம் ஆண்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வெளியிடப்பட்டதா? என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக சொல்ல முடியாது" என்று தனது மனுவில் தெரிவித்துள்ள விஜய், தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
