பெண்களை இடிக்கவே பேருந்தில் சென்ற பிக்பாஸ் சரவணன்.. இதுக்கு கைத்தட்டுவதா?.. சின்மயி சீறல்
சென்னை: பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக பிக்பாஸ் சரவணன் கூறியுள்ளதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் 3-ஆவது சீசன் கடந்த 34 நாட்களாக நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கமல் ஹாசன் உரையாடுவார். இதில் நாமினேட் செய்யப்படுபவர்களில் யார் காப்பாற்றப்படுவார் என்பதை சனிக்கிழமை அறிவிப்பார்.
அது போல் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஞாயிற்றுக்கிழமைகளில் தெரிவிப்பார். இப்படியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தொகுத்து வழங்கிய கமல்
இந்த நிலையில் நேற்றைய தினம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அப்போது இயக்குநர் சேரன் மீது மீரா மிதுன் வீண்பழி சுமர்த்தினார். அதாவது அந்த நிகழ்ச்சியில் டாஸ்கின் போது சேரன் தன்னை தவறாக இடத்தில் கைவைத்ததாக மீரா கூறியிருந்தார்.

கருத்தை ஆமோதித்த சரவணன்
இந்த நிலையில் இதில் யார் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. இதையடுத்து மீராமிதுனிடம் கமல் பேசியது போது தெரியாமல் கை பட்டதற்கே இப்படி செய்கிறீர்களே அரசு பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே முண்டியடித்து கொண்டு பயணம் செய்வோர்களும் உண்டு. அப்படியிருக்கும் போது நீங்கள் பஸ்ஸில் எல்லாம் பயணம் செய்ய முடியாது போலயே என கமல் கூறிய கருத்தை சரவணன் ஆமோதித்தார்.

புனிதராகி
இதற்கு கமல், பாருங்கள் சரவணன் கூட இது போன்ற அநியாயத்தை தட்டிக் கேட்டிருக்கிறார் போல் என கூற, அதற்கு சரவணனோ சார் நான் கல்லூரி படிக்கும் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் பயணம் செய்துள்ளேன் என்றார். இதற்கு நீங்கங்கள் அதையும் தாண்டி புனிதராகிவிட்டீர்கள் என்றார்.
|
வீடியோ
இதை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டினர். இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தில் ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ குறித்து சின்மயி கூறுகையில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கும் நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் ஆடியன்ஸும் கை தட்டுகிறார்கள் என கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications