அமெரிக்காவின் அடிமடியில் கை வைத்த சீனா! டிரம்ப் வரும் முன்பே நெருப்பை கக்கிய "டிராகன்".. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவிற்கு காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்து உள்ளது. சீனாவின் செமிகண்டக்டர் பொருட்களுக்கு, நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

கணினி சிப்-தயாரிக்கும் கருவிகள், மென்பொருள் மற்றும் உயர் அலைவரிசை சிப்புகளை தயாரிக்க காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும். இந்த பொருட்களைத்தான் சீனா தடை செய்துள்ளது. ஏற்கனவே 2 முறை இதேபோல் முக்கியமான தனிமங்களை, உலோகங்களை சீனா தடை செய்தது. இப்போது 3வது முறையாக முக்கியமான பொருட்களை சீனா தடை செய்தது.

china donald trump brics narendra modi

அமெரிக்கா செமிகண்டக்டர் துறையில் உற்பத்திகளை செய்ய முடியாமல் தடுப்பதற்கும், முக்கியமான சிப்களை செய்ய முடியாமல் தடுப்பதற்கும் வசதியாக இந்த தடைகளை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபின் சீனாவின் பொருட்களுக்கு தடை விதிக்க, கூடுதல் ஏற்றுமதி வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே அவரின் ஆட்சியில் சீனாவின் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தார். இந்த முறை மீண்டும் வரி மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீனா அமெரிக்காவிற்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்ய மறுத்துள்ளது.

முக்கியமாக காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்கள் ராணுவ துறையிலும் பயன்படுத்தப்படும்.

எச்சரிக்கை: ஏற்கனவே சீனா, இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.

அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாரவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவிற்கு காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்து உள்ளது. சீனாவின் செமிகண்டக்டர் பொருட்களுக்கு, நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் இரண்டு நாட்டு உறவு பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

முக்கியமாக இரண்டு நாட்டு வர்த்தகம் மிக மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. அதேபோல் அமெரிக்காவிற்கு சிப் தயாரிப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். முக்கியமாக ராணுவம் தொடர்பான தயாரிப்புகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+