அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்
சென்னை: ஒரு பக்கம் போர் மேகங்கள், இன்னொரு பக்கம் ஏவுகணைத் தாக்குதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க... சீனா மட்டும் சத்தமே இல்லாமல் தனது பொருளாதார அடித்தளத்தை இரும்புக்கோட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறது. அந்த நாடு கையில் எடுத்திருக்கும் பிரம்மாண்ட ஆயுதம்: தங்கம்!
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில், எதிர்கால நிதி நெருக்கடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள 'தங்கக் கவசத்தை' (Gold Shield) மிகத் தீவிரமாகத் தயாரித்து வருகிறது சீனா. சீனாவின் மத்திய வங்கியான பி.பி.ஓ.சி (PBOC), கடந்த 16 மாதங்களாகத் தொடர்ந்து தனது தங்க இருப்பை அதிகரித்து வருவது உலக நிதி நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீன தங்கம்
மார்ச் 2026 நிலவரப்படி, சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க இருப்பு 2,309 டன்களாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 387.6 பில்லியன் டாலர்கள்! கடந்த 20 மாதங்களிலேயே சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு இருமடங்காக அதிகரித்திருப்பது, அந்த நாட்டின் நீண்டகாலத் திட்டத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. இது வெறும் முதலீடு மட்டுமல்ல, டாலர் வீழ்ச்சிக்கு எதிரான ஒரு 'இன்சூரன்ஸ் பாலிசி' என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 2,309 டன் என்பது வெறும் 'டிரெய்லர்' தான், மெயின் பிக்சர் இன்னும் பயங்கரமாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஷாங்காய் தங்கச் சந்தை (Shanghai Gold Exchange), ஹாங்காங் இறக்குமதி மற்றும் ரஷ்யாவுடனான நேரடி ஒப்பந்தங்களைக் கணக்கிட்டால், சீனாவின் உண்மையான தங்க இருப்பு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட 2 முதல் 10 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஷாங்காய் சந்தையில் வாங்கப்படும் தங்கம், அங்கிருந்து மாற்றப்பட்டு ரகசிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அது எங்கே போகிறது என்பது யாருக்கும் தெரியாத ஒரு 'பிளாக் ஹோல்' (Black Hole) சிஸ்டத்தை சீனா உருவாக்கியுள்ளது.
எண்ணெய், உரம், தங்கம்!
சீனாவின் ஆட்டம் தங்கத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. உலகச் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைத் தேக்கி வைப்பது, உர ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்து மற்ற நாடுகளின் விவசாயத் துறையைத் தவிக்கவிடுவது எனப் பலமுனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
சர்வதேசப் பொருளாதாரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலும், சீனாவை எந்த நாடும் அசைக்க முடியாத ஒரு நிலையை நோக்கி அது நகர்கிறது. இந்த இருப்புகளைக் கொண்டு செல்ல கடல் வழிப்பாதையோ, குழாய்களோ தேவையில்லை என்பது அந்த நாட்டுக்குக் கூடுதல் பலம்.
காகிதத் தங்கம்
தற்போதைய சந்தையில் ஒரு விசித்திரமான போக்கு நிலவுகிறது. சாதாரண முதலீட்டாளர்கள் தங்க இ.டி.எஃப் (Gold ETFs) எனப்படும் காகிதத் தங்கத்தை நோக்கி ஓடும்போது, சீனா மட்டும் தனது ரகசியக் கருவூலங்களில் நிஜமான தங்கக் கட்டிகளை (Physical Gold) குவித்து வருகிறது. இது காகித மதிப்புக்கும், உண்மையான சொத்து மதிப்புக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளில் உலக நிதிச் சமநிலை முற்றிலுமாக மாறப்போகிறது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீனா உருவாக்கி வரும் இந்தத் 'தங்கப் பாதுகாப்பு வளையம்', உலகப் பொருளாதார வரிசையைத் தலைகீழாக மாற்றி எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
-
ரூ.2 லட்சத்தை தாண்டும் தங்கம்.. நிலைமை கைமீறும்? 'கோல்ட் குரு' சாந்தகுமார் உடைக்கும் ரகசியங்கள்! -
ஈரான் போருக்கு நடுவில் குத்தாட்டம் போடும் மல்டிபேக்கர் பங்கு! 3 வருடத்தில் 1164% லாபம், 4:1 போனஸ் பங்கு -
தங்கம் விலையில் இன்று பூகம்பம்.. அமெரிக்கா பகீர்.. ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால்.. எல்லாம் மாறுது -
இந்தியாவுக்கு வந்த கேட்ச்-22 சிக்கல்.. இனி அடுத்தடுத்து பிரச்சனை தான்? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications