கிராம் தங்க விலை உயர்வில் 2026ல் பெரிய மாற்றம்? தங்கத்தை நான்ஸ்டாப்பாக வாங்கும் சீனாவின் சீக்ரெட்
சென்னை: சீனா தங்கம் வாங்குற வேகத்தை பார்த்துதான், இப்போது மொத்த நாடுகளும் வாயடைத்து போயுள்ளதாம்.. ஏன் தெரியுமா? கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறதாம் சீனா.. இதைப்பற்றிதான் புதிய செய்தி வெளியாகி வியப்பை கூட்டி வருகிறது. அத்துடன் 2026ல் தங்கம் விலை விழப்போவதாகவும் செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. அவைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தங்கத்தின் விலை இப்போது நாளுக்குநாள் எகிறி வருகிறது.. உலகின் பல மத்திய வங்கிகள் கடந்த சில மாதங்களில் தங்களது தங்கச் சேமிப்பை அதிகரித்து வருகின்றன.

தங்கம் நாணய மதிப்புக்கு எதிராக பாதுகாப்பான முதலீடாகும் என்பதால் இது மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக, ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் செய்த பின்னர், ரஷ்யாவின் வெளிநாட்டு சேமிப்புகள் முடங்கியதால், பல நாடுகள் தங்கள் பணத்தை தங்கத்தில் சேமிக்க முயற்சி செய்து வருகின்றன.
அந்தவகையில்தான் சீனாவின் மத்திய வங்கி கடந்த 13 மாதமாக தொடர்ச்சியாக தங்கம் வாங்கி வருகிறது. இதில் கடந்த மாதம் மட்டும் 30,000 டிராய் அவுன்சுகள் தங்கத்தை வங்கி வாங்கியது. இதனால் சீனாவின் மொத்த தங்க சேமிப்பு சுமார் 74.12 மில்லியன் டிராய் அவுன்சுகளாக உயர்ந்துள்ளது.
தங்கத்திற்கு பெஸ்ட் வருடம்
தங்கத்தின் விலை இப்போது ஒவ்வொரு அவுன்சுக்கும் $4,000-க்கும் மேலாக உள்ளது. அக்டோபரில் விலை கொஞ்சம் குறைந்திருந்தாலும், இன்னும் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது... இதனால் இந்த வருடம் தங்கத்திற்கு மிகச்சிறந்த ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. இதில் முக்கிய காரணம், அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று சந்தை நம்புகிறது. அதே நேரம், அடுத்த Fed தலைவர் பணப் கொள்கையில் மென்மையான அணுகுமுறையை பின்பற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை மேலே செல்லும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சேமிப்பை அதிகரிக்கும் நாடுகள்
அதேபோல உலகின் பல மத்திய வங்கிகள் தங்களது தங்க சேமிப்பை அதிகரித்து கொண்டிருக்கின்றன.. இது நாணய மதிப்புக்கு எதிராக பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது... முக்கியமாக, ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் செய்த பிறகு, ரஷ்யாவின் வெளிநாட்டு சேமிப்புகள் முடங்கிப் போய்விட்டதால், பல நாடுகள் தங்கள் பணத்தை தங்கத்தில் சேமிக்கும் முயற்சிகளை மேற்கொண்டன..
சீனாவும் வெளிநாட்டு மத்திய வங்கிகளை தங்கள் தங்கத்தை சீனாவில் வைக்க சொல்கிறது. இதுவரை சில நாடுகள் இதை ஏற்று தங்களது தங்கத்தை சீனாவில் வைக்க ஆரம்பித்திருக்கின்றன.. அந்த வகையில் கம்போடியா உள்ளிட்ட சில நாடுகள் தங்களின் தங்கத்தை சீனாவிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. இப்படியாக, சீனா உலகளவில் தங்க சந்தையில் முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறது.
நான்ஸ்டாப் சீனா
மொத்தத்தில், சீனா தொடர்ந்து தங்கம் வாங்குவதாலும், உலகின் பல மத்திய வங்கிகள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருவதாலும், தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளது.. இதனால் வரும் 2026ம் ஆண்டில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள்..
அதாவது சீனா தங்கத்தை தொடர்ந்து வாங்கும் போது, தங்கத்தின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக அடித்து சொல்கிறார்கள் வல்லுநர்கள். அந்தவகையில், சீனா நான்ஸ்டாப்பாக தங்கத்தை வாங்குவதுதான் தற்போது உலக நாடுகளின் கவனத்தை பெற்று வருகிறது.
தங்கம் விலை குறையும்?
இதனிடையே, தேவை குறையும்போது 2026ல் தங்கத்தின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்..
ஆசிய, குறிப்பாக சீனாவில், தங்க நகைகளுக்கான வரிச்சலுகை நீக்கப்பட்டதால் விற்பனை குறைந்துள்ளது. இதனால் தேவை குறைந்து, 2026ல் விலை குறைய வாய்ப்பிருக்கும் என்கிறார்கள்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற தகவல், உலக அளவில் தங்கத்தின் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவதால், அதன் தேவை அதிகரித்து நம்முடைய நாட்டிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அப்படி வட்டி குறைப்பு உறுதியானால், தங்கத்தின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்..
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications