150 வயசு வரை மனிதரை வாழ வைக்கும் அதிசய மாத்திரை.. முதுமை நெருங்காது.. உலக நாடுகளை வியக்க வைத்த சீனா
சென்னை: மனித குல முன்னேற்றத்துக்கான புது புது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து கொண்டேயிருக்கின்றன.. அந்தவகையில், சீனாவைச் சேர்ந்த Lonvi Biosciences என்ற ஆராய்ச்சி நிறுவனம், கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சி ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இதுகுறித்த செய்திதான் சோஷியல் மீடியா முழுவதும் பரவி, பலருக்கும் வியப்பையும் தந்து வருகிறது. அதென்ன ஆராய்ச்சி தெரியுமா?
மனிதர்கள் அனைவருக்குமே வாழும் ஆசை அதிகம்.. ஆனால் ஆசைப்படும் அளவுக்கு ஆயுட்காலம் இருப்பதில்லை.. மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டாலும், இது சாத்தியமாவது கடினமாகிவிட்டது.

மனிதனின் மரணம்
பெரும்பாலும் இதய துடிப்பை பொறுத்தே உயிரினங்களின் ஆயுள் அமைகிறது. வேகமாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினங்களுக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் உயிரினங்களின் ஆயுள் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மனிதர்களை பொறுத்தவரை, சராசரி ஆயுட்காலம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருகிறது.. அதிலும் கொரோனாவிற்கு பிறகு ஆயுட்காலம் இன்னும் குறைந்துவிட்டது.. போதாக்குறைக்கு இதில் இளம் வயது மரணங்களும் சேர்ந்துவிட்டன..
150 வருட ஆயுட் காலம்
யதார்த்த சூழல் எப்படியிருந்தாலும், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதே பெரும்பாலனோரின் கனவாக, ஆசையாக இருக்கிறது. இயற்கைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்றாலும், மரணத்தை தள்ளி போட முடியும்.. எனவே அதற்கான ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்தபடியே உள்ளன..
1960களில் இந்திய மக்களின் சராசரி ஆயுள் காலம் 46 வருடங்களாக இருந்திருக்கிறது. பிறகு 20 ஆண்டுகளில் 55.6 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.. 2000-ல் 63.5 ஆண்டுகளாகவும், 202ல் 67 ஆகவும் இந்தியரின் ஆயுட் காலம் அதிகரித்த நிலையில், இந்த ஆயுட்காலத்தை மேலும் நீட்டிக்கும் முயற்சியில் சீன ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திராட்சை விதை சாறு
சமீபத்தில் இது தொடர்பாக ஒரு மாத்திரையையும் கண்டுபிடித்துள்ளனர்.. திராட்சை விதையின் சாற்றில் இருந்து இந்த மாத்திரை உருவாக்கப்படுகிறது. இதே மாத்திரையை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களின் ஆயுட் காலத்தை 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
இந்த மாத்திரைகள் உடலிலுள்ள சோனி செல்கள் எனப்படும் ஆரோக்கியமான செல்களை (Senescent Cells) காக்க செய்து, வயதான செல்களை அழித்துவிடுமாம்.. ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும்போது, முதுமை நெருங்காமல் ஆயுட்காலமும் கூடும் என்கிறார்கள்.
மாத்திரை - எலிகள்
லான்வி பயோசயன்சஸ் என்ற சீனா நிறுவனம் ஆன்டி ஹிங் எனப்படும் இந்த முதுமை எதிர்ப்பு மாத்திரைகளை உருவாக்கி வருகிறது. இந்த ஆய்வு இந்த ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த மாத்திரையை முதலில் எலிகளுக்கு செலுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அப்போதுதான் மனித ஆயுள் கூடும் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆன்டி ஹிங் எனப்படும் இந்த முதுமை எதிர்ப்பு மாத்திரைகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உலகளவில் ஏற்படுத்தி வருகின்றன.
லான்வி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "சரியான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவ பராமரிப்பு இணைந்தால், இந்த மருந்து மனிதர்களை 150 வயது வரை வாழச் செய்யும்" என்று தெரிவித்திருக்கிறது.
இது உண்மையான தகவலா?
இதுகுறித்த மனிதர்களுக்கான பரிசோதனை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், முதுமை எதிர்ப்பு (Anti-Aging) மருத்துவ துறையில் இது ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. எனினும் 150 ஆண்டுகள் வாழலாம் என்ற ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் முடிவு அல்ல, இது ஆரம்பகட்ட ஆய்வில் கிடைத்த நம்பிக்கை மட்டுமே என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications