வைரமுத்துவுக்கு இதற்காகவே கூடுதலாக ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. சின்மயி கடும் தாக்கு
சென்னை: தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் வழங்க உள்ளதை விமர்சித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வரும் 28ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வழங்க உள்ளார். இது தொடர்பான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சின்மயி, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில் அவர், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பட்டம்
கௌரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம்.
|
சின்மயி விமர்சனம்
உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க.. வெல்டன் தனியார் பல்கலைக்கழகம்" என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
நல்ல நாடு
சின்மயி தனது இன்னொரு பதிவில், வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அருமையான மல்டி ஸ்டார்களின் படங்களில் பணியாற்றி உள்ளார். உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள் என்று கூறியுள்ளார்.

வைரமுத்து மறுப்பு
வைரமுத்து தன்னிடம் வெளிநாட்டில் தவறாக நடக்க முயன்றதாக சின்மயி தொடர்ந்து டுவிட்டரில் குரல் எழுப்பி வருகிறார். மீடு இயக்கம் தொடங்கப்பட்ட பிறகே இந்த பிரச்சனையை தெரிவித்தார். இந்தபுகார்களை எல்லாம் வைரமுத்து திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications