சின்மயிக்கு சாபமிட்ட கும்பல்.. விவாதமான தாலி விவகாரம்.. ஹைதராபாத் போலீஸ் கமிஷனருக்கு பறந்த புகார்
சென்னை: திருமணத்துக்கு பிறகு எனது மனைவி சின்மயியிடம் தாலி அணிவது அவரது விருப்பம் என்று கூறினேன்'' என்று பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் கூறிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்தை மையப்படுத்தி எக்ஸ் ஸ்பேஜில் விவாதம் நடத்திய சிலர் சின்மயி போன்ற பெண்களுக்கு குழந்தை இருக்காது. ஒரு வேளை குழந்தை பிறந்தால் சீக்கிரமாக இறந்துவிட வேண்டும் என்று கூறிய ஆடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சின்மயி அளித்த புகாரை தொடர்ந்து ஹைதராபாத் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பிரபல பாடகியாக இருப்பவர் சின்மயி. இவரது கணவர் பெயர் ராகுல் ரவீந்திரன். இவர் நடிகராக இருக்கும் இவர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்து உள்ளார். தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவை வைத்து ‛தி கேர்ள் பிரண்ட்' என் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் நாளை (நவம்பர் 7) ரிலீசாக உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன், சமீபத்தில் அளித்த பேட்டி விவாதத்தை கிளப்பியது. அந்த பேட்டியில் ராகுல் ரவீந்திரன், ‛‛திருமணத்துக்கு பிறகு எனது மனைவி சின்மயியிடம் தாலி அணிவது அவரது விருப்பம் என்று கூறினேன். தாலி அணிய வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆண்களுக்கு திருமணத்திற்கன அடையாளம் என்று எதுவும் இல்லை. ஆனால் பெண்கள் மட்டும் தாலி அணிந்து திருமணம் ஆனதை காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானது'' என்று கூறியிருந்தார்.
ராகுல் ரவீந்திரனின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பியது. ஒரு தரப்பினர் அவரது கருத்தை பாராட்டினர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் எதிர்த்தனர். தாலி என்பது காலம் காலமாக திருமணத்தின் அடையாளமாக பெண்கள் அணிந்து வருகின்றனர். இது திருமணமான பெண்களுக்கான அடையாளம் என்று கூறி அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக எக்ஸ் ஸ்பேஸில் சிலர் விவாதம் நடத்தி உள்ளனர்.
சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரனின் தாலி தொடர்பான கருத்து பற்றி பேசினர். சிலர், ‛‛சின்மயி போன்ற பெண்களுக்கு குழந்தை இருக்காது. ஒரு வேளை குழந்தை பிறந்திருந்திருந்தால் விரைவில் இறந்துவிடுவார்கள்'' என்று கூறியுள்ளனர். மேலும் இன்னும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சின்மயி மற்றும் அவரது கணவரின் பெயர்களை கூறி விமர்சனம் செய்துள்ளனர். இதுதொடர்பான விவாதம் இணையதளங்களில் பரவ தொடங்கியது.
யஷஸ்வினி என்பவர், தனது எக்ஸ் பக்கத்தில் அந்த உரையாடலை பதிவிட்டு இருந்தார். அவர் அந்த விவாதத்தில் பங்கேற்று இருந்த நிலையில், பலரும் அவதூறாக பேசியதால் ‛‛பெண்களுக்கு என்று தனி ஏஜென்சி உள்ளது. ஆன்லைனில் பெண்கள் பற்றி தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் எப்படி பேசுகின்றனர். என்னை மட்டுமின்றி சின்மயி பற்றியும் மோசமாக பேசுகின்றனர். சின்மயி பற்றி பேசியதை நான் ரெக்கார்ட் செய்யவில்லை. இருப்பினும் இவர்கள் மீது சின்மயி புகார் அளிப்பார் என்று நம்புகிறேன்'' என கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த சின்மயி எக்ஸ் பக்கத்தின் மூலமாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜஜனரிடம் புகார் அளித்துள்ளார். அவரை டேக் செய்த சின்மயி, ‛‛தினமும் வரும் அவதூறுகளால் நான் சோர்வடைந்துவிட்டேன். தெலுங்கானாவில் பெண்கள் சிறந்த நிலையை அடைய வேண்டும். ஒருவருக்கு ஒரு கருத்து பிடிக்கவில்லை என்றால் அவர்கள் புறக்கணித்து செல்லலாம்.
இதுதொடர்பாக புகார் அளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வழக்கு 15 ஆண்டுகள் ஆனாலும் சட்டம் தனது கடமையை செய்யப்பட்டும். இதில் பேசியவர்கள் எனது குழந்தைகள் இறக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தயவு செய்து உதவுங்கள்'' என்று புகார் தெரிவித்தார்.
இந்த புகாரை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஹைதராபாத் சைபர் கிரைம் மற்றும் ஹைதராபாத் சிட்டி போலீசுக்கு டேக் செய்து இதுபற்றி செக் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால் சின்மயி பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications