நகைச்சுவை மட்டுமல்ல சமூக அக்கறை கருத்துக்களை சொன்ன 'சின்னக்கலைவாணர்' விவேக்
மதுரையில் பிறந்து சின்னக்கலைவாணராக உயர்ந்த விவேக் இன்று காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: மதுரையில் பிறந்து சின்னக்கலைவாணராக மக்களின் மனதில் வாழ்ந்து மறைந்துள்ளார் நடிகர் விவேக். அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள் மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்த விவேக், தீராத சினிமா தாகம் கொண்டவர். 1986 ஆம் முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழக தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றினார் விவேக். அரசு ஊழியராக பணியாற்றினாலும் சினிமா மீதான கொண்ட ஆசையால் கலைத்துறையில் பயணத்தை தொடங்கினார்.
தமிழ் திரைப்படத்துறையில் சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் தனது திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனை கருத்துக்களை பரப்பி வந்தவர். அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் 'சின்னக்கலைவாணர்' எனப் போற்றப்பட்டார்.

சினிமா பயணம்
1987 ஆம் ஆண்டு மனதில் உறுதிவேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த சின்னக்கலைவாணர் விவேக் அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த புது புது அர்த்தங்கள் திரைப்படத்தில், இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

வசனங்களால் சிந்திக்க வைத்தவர்
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிபடுத்தும் காட்சிகளில் நடிக்காமல், நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார். இதன் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார் நடிகர் விவேக்.

சமூக கருத்துக்களை பரப்பியர்
விவேக்கின் நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் 'சின்னக்கலைவாணர்' என்றும், 'மக்களின் கலைஞன்' என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

சமூக சேவை
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்த விவேக் நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்தார்.

மக்கள் மனங்களில் வாழ்பவர்
திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதுவழங்கி கௌரவித்தது. பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் நடிகர் விவேக். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்த விவேக் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய கருத்துக்கள் வசனங்கள் மூலம் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருவார் என்பது நிச்சயம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications