Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்ரா தூக்கு போட்டு கொண்ட.. ஃபேனை பிடித்து தொங்கிய தாய்.. ஹோட்டல் ரூமில் பெரும் பரபரப்பு

சித்ராவின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்ரா தூக்கு போட்டு தொங்கிய சீலிங் பேனை பிடித்தபடி, திடீரென சித்ராவின் அம்மாவும் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கடுமையான வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை எந்த நடிகையின் தற்கொலையும் இப்படி ஒரு மர்மத்தை தாங்கி கொண்டிருந்ததில்லை.. உண்மையிலேயே சித்ரா எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? சித்ரா இறந்த அன்று ஹோட்டல் ரூமில் என்னதான் நடந்தது? என்பது பற்றி இதுவரை முழுமையாக தெரிய வரவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக பலவித குழப்பங்களும் எழுந்தபடியே உள்ளன.. பல கோணங்களில் விசாரணை நடந்து, சித்ராவை தற்கொலைக்கு ஹேமந்த் கைது செய்யப்பட்டார்...

 நகக் கீறல்

நகக் கீறல்

பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சித்ராவின் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட காயங்கள் மட்டுமே இருப்பதாகவும், நபர்கள் யாரும் அடித்து தாக்கியதான காயங்கள் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இதைதவிர, சித்ராவின் தாடையில் இருந்த கீறலும் அவரது நகத்தினால் ஏற்பட்டது என்றும் தெளிவாக்கப்பட்டது.

 ஹோட்டல்

ஹோட்டல்

இந்நிலையில் மீண்டும் சித்ரா குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. சித்ரா தங்கியிருந்த அந்த ஹோட்டல் ரூமிற்கு அவரது அம்மா வந்துள்ளார்.. ரூமில் உள்ள சித்ராவின் டிரஸ்களை எடுத்து செல்ல சித்ரா, ஹேமந்த் குடும்பத்துக்கு போலீசார் அனுமதி தந்துள்ளனர்.. அதனால், சித்ராவின் குடும்பம் மட்டும் முதலில் ஹோட்டலுக்கு வந்தது.. போலீசார் துணையுடன் இவர்கள் வந்தனர். சித்ராவின் அம்மா, அப்பாவும், உறவுக்கார பெண்ணும் வந்திருந்தனர்.

 ரூம் கதவு

ரூம் கதவு

சித்ரா தங்கியிருந்தது, 113-வது ரூம் ஆகும்.. அந்த ரூமை திறந்ததுமே கதறி கதறி அழ ஆரம்பித்துவிட்டார் சித்ராவின் அம்மா.. பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்ட அந்த சீலிங் ஃபேனை பார்த்து பார்த்து கதறினார்.. பிறகு திடீரென அந்த கட்டிலின் மீது ஏறி பிடித்து தொங்கினார்.. "இது எனக்கே இப்படி எட்டுதே, என் பொண்ணு எப்படி இதில் தற்கொலை செய்துகொள்ள முடியும்?" என்று கேட்டு கொண்டே கதறினார்.

 பரபரப்பு

பரபரப்பு

பிறகு ரூமையே சுற்றி சுற்றி வந்தவர், "சித்ரா நீ எங்கம்மா இருக்கே?" என்று கேட்டபடியே இருந்தார்.. அந்த ரூமில் சித்ராவின் டிரஸ்கள், மேக்கப் பொருட்கள், மற்றும் கடைசியாக பயன்படுத்திய பொருட்கள் என் எல்லாவற்றையும் பேக் செய்து கொண்டு வெளியே சென்றார். சித்ரா அம்மா அந்த ரூமில் நடந்து கொண்டதை பார்த்ததும் உடனிருந்தோரும் கலங்கி அழுதனர்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+