சிட்டா, அடங்கல் ஆவணம் அவசியம்! நிலத்தை வைத்துள்ளோர் அறிய வேண்டியது! பட்டா, சிட்டா விண்ணப்பிப்பது ஈஸி
சென்னை: பத்திரப்பதிவுத்துறையால் பதிவு செய்யப்படும், பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்படும் சொற்களை அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. அந்தவகையில், சிட்டா என்றால் என்ன? சிட்டாவின் முக்கியத்துவம் என்ன? சிட்டா பெறுவதற்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
சொத்து வைத்திருப்போர் கட்டாயம் பட்டா ஆவணத்தை வைத்திருப்பார்கள்.. பட்டாவின் ஒரு பகுதியைதான் சிட்டா என்பார்கள்.. பட்டாவில் ஏற்கனவே சில அடிப்படை தகவல்கள் இருந்தாலும், கூடுதல் தகவல்களும் சேர்த்து இடம்பெறுவதுதான் சிட்டா.

குறிப்பாக, சொத்து எங்கு உள்ளது, அதன் அளவுகள் என்னென்ன? சம்பந்தப்பட்ட நிலத்தின் ஓனர் யார? நிலத்தின் தன்மை அதாவது நஞ்சை, புஞ்சையா? நிலம் அமையப்பெற்றுள்ள மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, பயன்பாட்டில் உள்ளதா? என மொத்த விவரமும் சிட்டாவில் இடம்பெற்றிருக்கும்.
சிட்டா என்பது என்ன
சுருக்கமாக சொல்லப்போனால், குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் கொண்ட வருவாய்த்துறை ஆவணமாகும்.
பட்டாவை போலவே சிட்டா ஆவணங்களும் அவசியமாகும்.. உதாரணத்துக்கு வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது. சொத்தின் உரிமை, சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள இடம் போன்றவற்றை வைத்துதான் கடன் பெறும் தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் சிட்டா ஆவணம் தேவை
அதேபோல, விவசாயம் நிலம் மற்றும் விவசாயம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்பு அடைந்தாலோ, நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டாலோ அதற்கான இழப்பீட்டு தொகை பெறுவதற்காகவும், பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது. அதேபோல, ஒரு விவசாய நிலத்தை விற்பனை செய்ய வேண்டிய சூழல் வந்தால் அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை வந்தால், பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து இந்த 2 ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. குடிமக்கள் தங்களது சிட்டா பட்டா, அடங்கல் சான்றிதழ்களை இப்போது ஆன்லைன் மூலமாகவும் பார்க்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
- பட்டா சிட்டா ஆன்லைன் பெற வேண்டிய அரசின் அதிகாரபூர்வ வலைதளம் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற முகவரிக்குள் நுழைய வேண்டும்.
- பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இப்போது தோன்றும் பக்கத்தில் கீழ்கண்ட தேர்வுகளை பூர்த்திசெய்யவும் .
அதில் 1) மாவட்டம், 2) வட்டம் , 3) கிராமம் 4) பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட 5) அங்கீகார மதிப்பை உள்ளிடவும், 6) செல்போன் நம்பர் பதிவு செய்யவேண்டும், பின்னர் அதற்க்கு ஒடிபி OTP வரும், அதனை உறுதிப்படுத்த வேண்டும், போன்ற விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- பிறகு உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா திரையில் தோன்றும். சிட்டா சான்றினை சரி பார்த்தபிறகு, அதற்கு கீழுள்ள "Print" என்ற பட்டனை அழுத்த வேண்டும்.. இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
பார்வையிட - சரிபார்க்க
பட்டா / சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகரநில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் (Correlation Statement) போன்றவை பதிவிறக்கம் செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடங்கல் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
ஒரு ஊரில் இருக்கும் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு தான் அடங்கல் என சொல்லப்படுகிறது. இந்த அடங்களில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் எது? அந்த நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது, அதன் பட்டா எண் என்ன? அந்த நிலம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது போன்ற விவரங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நிலம் வாங்குபவர்கள் இந்த ஆவணங்களை சரிபார்த்து கொண்டால் வருங்காலத்தில் சிக்கல் இருக்காது.
ஆனால், பெரும்பாலான இடங்களில் வருவாய் ஆவணங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆய்வு செய்வதில்லையாம.. அதனால்தான், மோசடியில் அப்பாவி மக்கள் சிக்கும் நிலைமை ஏற்படுவதாக கூறுகிறார்கள்..
உதாரணமாக, விற்பவர் பெயரில் பட்டா இருக்கிறதென்றால், அந்த பட்டாவின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும். அதே நேரத்தில் அதில் உள்ள தகவல்களை உறுதிபடுத்தும் பிற ஆவணங்களான சிட்டா, அடங்கல், எப்எம்பி., போன்றவற்றை ஆய்வு செய்வதில்லையாம்.
பட்டாவை சரியாக ஆய்வு செய்துவிட்டோமே என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்.. அதுமட்டுமல்ல, சில சமயங்களில், பட்டாவிலும், பத்திரத்திலும் உள்ள விபரங்கள் சரியாக இருக்கும். ஆனால், அடங்கலை ஆய்வு செய்தால் அந்த நிலம் வேறு ஒரு நபரின் பயன்பாட்டில் இருக்கும்.
எனவேதான், பட்டாவின் உண்மை தன்மையை ஆய்வு செய்வது போலவே, மனை குறித்து பட்டாவில் உள்ள விபரங்களுக்கு, சிட்டாவிலும், அடங்கலிலும் உள்ள தகவல்கள் பொருத்தமாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications