சசிகலாவுக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரை கொடுத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
சென்னை: சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த கார் கொடுத்த சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி கட்சியில் இருந்து நீக்கபட்டார்.
Recommended Video

சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்த மேலும் 6 பேரையும் கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியுளளது.

சசிகலா வருகிறார்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவிட்டு பண்ணை வீட்டுக்கு சென்ற போது சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்தார். இது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பியது. இந்த நிலையில் அவர் இன்றைய தினம் காலை 7.40 மணிக்கு கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறார்.

அகற்ற மறுப்பு
அப்போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக எல்லையில் அதிமுக கொடியை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கொடியை அகற்ற சிறிது நேரம் கால அவகாசம் வழங்கப்படும். ஒரு வேளை அகற்ற மறுத்தால் போலீஸாரே அகற்றுவர் என எச்சரிக்கப்பட்டது.

எஸ்.ஆர். சம்பங்கி
வேறு ஒரு கார் இந்த நிலையில் சசிகலாவின் கார் தமிழக எல்லையான ஜூஜூவாடியை வந்தடைந்தது. அப்போது அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது. எனினும் சசிகலாவுக்கு பின்னால் வந்த வாகனங்களில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் சசிகலா அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த வேறு ஒரு காருக்கு மாறினார். அந்த கார் அதிமுக சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி என்பவருக்கு சொந்தமானது.

கட்சியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் அதிமுக கொடி கட்டிய காரை சசிகலாவுக்கு கொடுத்தது சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதே போல் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்த மேலும் 6 பேரையும் கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியுளளது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications