குரோம்பேட்டை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில்.. நடுராத்திரியில் யாருப்பா அது.. ரொம்ப மொரட்டுத்தனமா!
சென்னை: குரோம்பேட்டை-- பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சர்வ சாதாரணமாக ஏராளமான மாடுகள் சுற்றி வருகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சாலைகளில் மாடுகளை விடுவோர் மீது தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது..
தாம்பரம் குரோம்பேட்டை -பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை என்பது சென்னையில் மிகவும் நெரிசலான சாலையாகும்.. இந்த சாலையில் எப்போதுமே வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதுதான் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை என்பதுடன், தமிழகத்தின் 90 சதவீதம் மக்கள் வெளியே செல்லும் வழியாக ஜிஎஸ்டி சாலை இருக்கிறது.

முன்பெல்லாம் ஆலந்தூரை கடந்தாலே அவுட்டர் என்கிற நிலை இருந்தது. ஆனால் வேளச்சேரி, ரேடியல் சாலைகள், ஓஎம்ஆர் சாலைகளில் அதிக ஐடி நிறுவனங்கள் வந்த காரணத்தால், பல்லாவரம் துரைப்பாக்கம் இடையே 200 அடியில் ஐடி காரிடர் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்ட சுமார் 20 வருடங்களில் பல்லாவரம் குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டது.
சென்னையின் மையப்பகுதிக்கு நிராக குரோம்பேட்டையும், பல்லாவரமும், தாம்பரமும் வளர்ந்தது. இதன் காரணமாக பல்லாயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியாக ஜிஎஸ்டி சாலை இருக்கிறது. சில நிமிடங்கள் ஜாம் ஆனாலே மொத்தமாக முடங்கும் அளவிற்கு நெரிசல் மிகுந்த இடமாக குரோம்பேட்டையும் பல்லாவரமும் இருக்கிறது.
Cattle menace on NH 45, GST Road, Chromepet. Under #TambaramCorporation. Will Police Department instruct Corporation to initiate necessary action to stop cattle from coming onto the roads. @Chief_Secy_TN @tnpoliceoffl @COPTBM @ChennaiTraffic @ArunIPSCOP @TambaramCorpor pic.twitter.com/dHSceGg05G
— David Manohar (@DavidManohar7) February 16, 2024
இந்த சூழலில் சென்னை குரோம்பேடை சாலையில இரவு நேரங்களில் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றுகின்றன. அந்த மாடுகள் நடு சாலை அமர்ந்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால், சாலையில் செல்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் மாடுகளை வளர்ப்போரை அடையாளம் காண்பது அதிகாரிகளுக்கு எளிது. சரியான முறையில் அடையாளம் கண்டு மாடுகளின் உரிமையாளர்கள் அழைத்து பேசி, சாலைகளில் விடாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தள்ளது. ஏற்கனவே மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது..எனவே மாடுகளை சாலையில் விடுவோர் மீது பெயருக்கு நடவடிக்கை எடுக்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications