போதை ஏறி போச்சு.. புத்தி மாறி போச்சு.. திமுக மேடையில் இப்படி ஒரு பாடலா
திமுக பொதுக்கூட்டத்தில் கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: "போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு" என்ற பாடலுக்கு பெண் ஒருவர் கவர்ச்சி நடனம் ஆடுகிறார். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை... ஆனால் இதனை திமுக பொதுக்கூட்டத்தில் ஆடியதுதான் விவகாரமாக எழுந்துள்ளது.
பொதுவாக கிராமங்களில் கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். ஆனால் மக்களை மகிழ்விக்க ஆடினாலும்கூட ஆபாச நெடி அதிகமாக வருகிறது என்பதால் இதற்கு தடை விதிக்க கோர்ட்டில் கேஸ் போடப்படும் அளவுக்கு நிலைமை ஆனது.
ஊர் திருவிழாவுக்கே இப்படி என்றால், ஒரு கட்சியில், அதுவும் பாரம்பரியம் மிக்க கட்சியான திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் இப்படி ஆடுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இணையத்தில் இது சம்பந்தமாக ஒரு வீடியோ வைரலாகி ஒன்று வருகிறது.

விழா மேடை
இது எந்த ஊர், எப்போது நடந்தது என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் திமுக பொதுக்கூட்டம் என்று தெரிகிறது. மேடையில் நாற்காலிகள் இன்னும் போடப்படவில்லை. பின்னால் பெரிய பேனர் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அதில் கருணாநிதி படம், ஸ்டாலின் படம், உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கருணாநிதி படத்தை விட ஸ்டாலின் போட்டோ பெரிதாக உள்ளது.

போதை ஏறிப்போச்சு
அதனால் இந்த கூட்டம் கருணாநிதி இறந்த பிறகுதான் நடந்திருக்கும் என்று யூகிக்க தோன்றுகிறது. விழா மேடையில் ஒரு இளம்பெண் அரைகுறை ஆடையுடன் வந்து, "போதை ஏறி போச்சு.. புத்தி மாறி போச்சு" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். முதலில், இந்த மாதிரியான கட்சிக்கூட்டத்தில் ஆடக்கூடிய நடனமா இது?, இந்த பாட்டுக்கும், பொதுக்கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று தெரியவில்லை.

நலத்திட்டங்கள்
முன்பெல்லாம் அதிமுக, திமுக, காங்கிரஸ் என கட்சி சார்பாக எந்த பொதுக்கூட்டம் நடந்தாலும், அந்த கட்சி தலைவர்களின் குணநலன்கள், மற்றும் அவர்கள் செய்த நலத்திட்டங்களை பாராட்டி பிரத்தியேகமாக ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல்களை ஸ்பீக்கர்களில் போட்டு விடுவார்கள். இதனை அங்கு கூடியிருக்கும் பொதுமக்கள் கேட்டு, நாடி நரம்புகளில் கட்சி உணர்வுகள் தெறித்து ஓடும்.
|
கருணாநிதி, ஜெ.,
ஆனால் கோடிக்கணக்கான தொண்டர்களை பெற்றுள்ள ஒரு பாரம்பரிய கட்சியில் இப்படி கவர்ச்சி நடனம் ஆடியிருப்பதை அனுமதித்திருப்பது அதிர்ச்சி மற்றும் முகசுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டிருந்தாலும் சரி, இப்படி ஒரு நடனமும், ஆபாசம் நிறைந்த அசைவுகளும் வரப்போகும் திராவிட இளம் ரத்தங்களுக்கு நல்ல சிந்தனையை பெற்று தராது. அதுமட்டும் இல்லை.. கருணாநிதி, ஜெயலலிதா என இருவரில் யார் உயிரோடு இருந்திருந்தாலும் சரி, இதுபோன்ற ஒரு செயலை ஒருபோதும் அனுமதித்து இருக்கவே மாட்டார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications