தக்காளியை விடுங்க.. ரூ.450 வரை உயரும் சினிமா டிக்கெட்.. இனி இரண்டு மடங்கு கட்டணம்? போச்சே!
சென்னை: சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.
நாடு முழுக்க தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் காரணமாக தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவின் பணவீக்கம் 4.25% ஆக உள்ளது.

இதன் காரணமாக பொருட்களின் விலையும் தொடர்ந்து 4-5 சதவிகிதம் வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை இப்போது சந்தையில் விற்கப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.
இந்த விலை ஏற்றத்திற்கு இடையில் தற்போது சினிமா டிக்கெட்டுகள் விலையும் அதிகரிக்க உள்ளது. சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.
அதன்படி 120 ரூபாயில் இருந்து விற்கப்பட்ட டிக்கெட் தியேட்டரை பொறுத்து அதிகபட்ச கட்டணத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ₹250 ஆக கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. AC திரையரங்குகளுக்கு ₹200 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. Non-AC திரையரங்குகளுக்கு ₹120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தியேட்டர்களில் படம் பார்க்க பார்க்கிங், உள்ளே கேண்டினில் காபி விலை தொடங்கி எல்லாமே மூன்று மடங்கு உள்ளது. இதனால் மக்கள் ஓடிடி பக்கம் செல்லும் நிலையம் அதிகரித்து உள்ளது. தியேட்டர்களுக்கு செல்வதற்கு பதிலாக ஓடிடி பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது டிக்கெட் மேலும் உயர்த்தப்பட உள்ளதால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications