ஷோபா தற்கொலை! போலீஸ் விசாரணையில் பாலுமகேந்திரா? மனம் திறந்த கேமராமேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டபோது பாலுமகேந்திராவிடம் காவல்துறை விசாரணை நடத்தியது பற்றி அவரது கூடவே இருந்த கேமராமேன் ராஜராஜன் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சீனியர் கேமராமேன் ராஜராஜன். விஜயகாந்த்துடன் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். குறிப்பாக சொன்னால் அவருடன் வேலை செய்த முதல் படம் 'வைதேகி காத்திருந்தாள்'. அதன்பிறகு பல படங்கள். அதில் மறக்க முடியாத படம் 'கேப்டன் பிரபாகரன்'. அடுத்து ரஜினிகாந்த்துடன் 'ராஜாதி ராஜா'. 'மலையாளக் கரையோரம் தமிழ்ப் பாடும் குருவி' பாடல் காட்சியை மிகச் சிறப்பாக எடுத்திருப்பார் ராஜராஜன். இப்படி 100 படங்களுக்கு மேல் பணியாற்றிய இவர், இயக்குநர் பாலுமகேந்திராவின் ஆஸ்தான அசிஸ்டெண்ட் கேமராமேன்.

Balu Mahendra actress Shoba

பாலுமகேந்திராவுக்கும் ஷோபாவுக்கும் இடையே இருந்த நட்பைப் பற்றியும் அவர் தற்கொலை செய்து கொண்ட போது நடந்த விவகாரங்கள் பற்றியும் ராஜாராஜன் மனம் திறந்து பேசியுள்ளார். அன்று என்ன நடந்தது? பலர் இதைப் பற்றி பேசி இருந்தாலும் பலரும் புதிய புதிய தகவல்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ஒளிப்பதிவாளர் ராஜராஜன் பேசி இருக்கிறார்.

ராஜராஜன் பேசும்போது, "அப்பா வாசு ஸ்டுடியோவில் காஸ்டியூமராக இருந்தார். அவர் சினிமாவில் இருந்ததால், பல படப்பிடிப்புகளுக்கு நேரில் அழைத்துப்போய் இருக்கிறார். அந்தக் காலத்தில் பார்க் எல்லாம் சென்னையில் இல்லை. பொழுதுப்போக்கு என்றால் சினிமாதான். அப்பா நேரடியாகவே படப்பிடிப்புக்கு அழைத்துப் போகும்போது அங்கே கேமராமேன்கள் வேலை செய்வதைப் பார்த்த போது பெரிய ஈர்ப்பு உருவானது.

Balu Mahendra actress Shoba

அப்போதே முடிவு செய்தேன், வாழ்க்கையில் கேமராமேனாக ஆகவேண்டும். ஆட்டோமொபைல் படிப்பில் அப்பா சேர்த்துவிட்டார். படித்து முடித்த பிறகு 3 மாதம் ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அதன்பின்னர் மனசு சினிமா மேல்தான் இருந்தது. அம்மா வற்புத்திதான் அப்பா கர்ணனிடம் சேர்த்துவிட்டார். அப்படியே படிப்படியாகக் கற்றுக்கொண்டு கேமராமேன் ஆனேன்.

அங்கே ஆறுமாதத்தில் வேலைகளைக் கற்றுக்கொண்டு வாஹினி ஸ்டுடியோவில் உதவி கேமராமேன் வேலையில் சேர்ந்தேன். அப்போது இந்த ஸ்டுடியோவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஒரே நாளில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பு நடக்கும். அந்தளவுக்கு பிசி. பிறகு பாலுமகேந்திரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தக் காலத்தில் தொப்பி, ஷூ எல்லாம் போட்டுக் கொண்டு ஒரு கதாநாயகன் போல் இருப்பார். அப்போது எனக்கு மாதம் 150 ரூபாய் சம்பளம்.

Balu Mahendra actress Shoba

அவருடன் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். 'முள்ளும் மலரும்' படத்திற்கு பாலு சார்தான் கேமராமேன். பாலுமகேந்திராவின் 7 படங்கள் வரை வேலை பார்த்தேன். அப்போது 12பி பஸ் டிரைவர் ஒருவர் சினிமாவில் கார் ஓட்டும் வேலைக்கு வந்திருந்தார். அம்பாசிடர் கார் டிரைவர். அவரிடம் ரஜினி கார் வாங்கி ஓட்டுவார். திருநீர்மலை வரை தடாலடியாக கார் ஓட்டிக் கொண்டு போவார் ரஜினி. அவர் ஒரு வித்தியாசமான மனிதர். அப்போதே அவருக்குப் பக்தி அதிகம். காலையில் ஒரு அரைமணி நேரம் மந்திரம் சொல்வார்.

திடீரென்று ஷோபா தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை அடிக்கடி போலீஸ் விசாரணைக்காகக் காவல்நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். நாங்களும் பாலு சாருடன் கூடவே போவோம். அங்கே விசாரணை நடக்கும்போது கூடவே இருப்போம். அவருக்கும் ஷோபாவுக்கும் காதல் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.

Balu Mahendra actress Shoba

ஆனால், ஷூட்டிங் ஸ்பாட் தாண்டி அந்தம்மா பாலு சார் கூடவேதான் இருக்கும். இருவருக்குள்ளாக இருந்த நெருக்கம் எங்களுக்கு தப்பா தெரியவில்லை. பாலு சார் மீது ஷோபாவுக்கு அதிக அன்பு இருந்தது. 'மூடு பனி' நேரத்தில் நான் ஜாவா பைக் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை பாலு சாரிடம் சொன்னேன். உடனே நான் பைக் வாங்க ஷோபாவிடம் பணம் வாங்கி கொடுத்தார். பாலு சார் வீட்டில் நான் ஒரு மகனாகவே வளர்ந்தேன். தினமும் காலையில் அவர் வீட்டில்தான் சாப்பாடு. அகிலா அம்மா தினம் விதவிதமாக சமைத்து போடுவார். அப்படிச் சாப்பிட்டு வாழ்ந்தவன் நான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+