யார் அந்த அமைச்சர்.. எல்லா பிரச்சினையிலிருந்தும் விடுபட.. "விஜய்"க்கு கை கொடுக்கிறாராமே!

விஜய், சந்திரசேகர் இடையே விரிசல் பெருகியபடியே வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரச்சனைகளில் இருந்து விடுபட விஜய்க்கு ஒரு அதிமுக அமைச்சர் உதவி செய்ய உள்ளாராம்.. இப்படி ஒரு தகவல் அரசியல் & சினிமா இரு துறைகளிலுமே பரபரபத்து வருகிறது.

சில தினங்களாகவே விஜய்க்கும், அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.. இவர்கள் 2 பேரும் எத்தனை மாசமாக பேசாமல் இருக்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை.. ஆனால், பிரச்சனைகள் தினந்தோறும் வெடித்து கிளம்பி வருகிறது.

Clash between Vijay and SA Chandrasekar issue

குறிப்பாக, எஸ்ஏசி & ஆர்கே ராஜா இருவருக்குள்ளும்தான் மோதல் அதிகமாகி வருவதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய கட்சியை எப்படியாவது நடத்துவது என்பதில் எஸ்ஏசி உறுதியாக இருக்கும் அதேசமயம், திமுக திமுகவிற்கு ஆதரவாக பணியாற்ற போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

தன் கட்சி பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று விஜய் சொல்கிறார்.. ஆனால், விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சியை ஆரம்பித்து, அதை முறைப்படி ரிஜிஸ்தர் செய்தது எஸ்ஏசி என்பதால், அவர் பக்கமே சட்டரீதியான நியாயங்களும் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான், மிக முக்கியமான துறையின் அமைச்சர் ஒருவர் விஜய்க்கு உதவுவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

இந்த அமைச்சர்தான் மெர்சல் பட பிரச்சனையின் போதும், தலையிட்டு விஜய்யை முதலமைச்சரை சந்திக்கவும் வைத்து, விலங்குகள் நல வாரியம் மூலம் வந்த பிரச்சனைக்கு தீர்வையும் பெற்று தந்தாராம்.. அதுபோலவே இப்போதும் அந்த அமைச்சர் உதவ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. எஸ்ஏசி தேர்தல் சமயத்தில் திமுகவுக்கு ஆதரவு தந்து பேச போகிறார் என்ற தகவல் கசிந்தஉடனேயே, விஜய்க்கு அதிமுக அமைச்சர் உதவுகிறார் என்ற அடுத்த செய்தியும் கசிந்து வருகிறது.. ஆக மொத்தம் அப்பா திமுக, மகன் அதிமுக என்ற ரீதியில் இந்த விவகாரம் இன்றைய தினம் சென்று கொண்டிருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+