சென்னை பட்டினம்பாக்கத்தில் விநாயகர் நிலை ஊர்வலத்தின் போது மோதல்.. பதறி ஓடிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கிக்கொண்டதால் அச்சமடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் பெரும் பதற்றம் உருவானது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14 ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் பொது இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 1,500-க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.

Clash during the Vinayagar procession in Chennai Pattinapakkam people fled in panic

இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என 4 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதலே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைத்து வந்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை பட்டினம்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டினப்பாக்கம் கலங்கரை விளக்கம் அருகே லூப் சாலையில் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இதோடு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என குடும்பம், குடும்பமாக ஊர்வலமாக வந்திருந்தனர். அப்போது பட்டினப்பாக்கத்தில் இரவு 7 மணியளவில் மட்டும் அதிகளவில் விநாயகர் சிலைகள் வந்ததால் கூட்டம் அதிகரித்தது.

இதனால் அங்கிருந்தவர்கள் வேகமாக கரைக்கும் படி கிரேன் ஆபரேட்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினர் இடையே திடீரென கைகலப்பு உண்டானது. உடனடியாக போலீசார் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை செய்தனர். பின்னர் வேகமாக விநாயகர் சிலைகளை கரைக்கவும், இளைஞர்களை பொறுமையாக இருக்கவும் கூறினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு உண்டானது.

இந்நிலையில், திடீரென லூப் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து இரு தரப்பினர் கம்பால் தாக்கிக் கொண்டபடி ஓடி வந்தனர். அவர்கள் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கியபடியே வந்ததால் விநாயகர் ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருப்பு நிற பணியன், ஆரஞ்சு நிற ரிப்பன் தலையில் கட்டியபடி வந்த இளைஞர்கள் கண்ணில் பட்டவர்களையும் சரமாரியாக கம்பால் தாக்கியதால், பொதுமக்கள் பலரும் நாலாபுறம் சிதறி ஓடினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்கு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பின் ஓடினர்.

இதே போன்று திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கடை ஒன்றின் மேற்கூரை அடித்து நொறுக்கி அகற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊர்வலமாக வந்த விநாயகர் சிலையை அப்பகுதியில் இருந்து வெளியே கொண்டு வரை அங்குள்ள கடையின் மேற்கூரை உரசியபடி இருந்தது. அதனை அகற்றினால் தான் வெளியே கொண்டு வர முடியும் என்பதால் அந்த கடையின் மீது ஏறிய சிலர் மேற்கூரையை காலால் மிதித்து உடைத்து அகற்றி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+