Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானத்தில் போக போறீங்களா? இனி சிக்கல்தான்! வானத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக இனிமேல் விமான பயணங்கள் மிக கடினமானதாக மாறப்போகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம் காரணமாக துருவ பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.

அதிலும் அண்டார்டிகாவில் நினைத்ததை விட வெப்பநிலை வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் ஐநா காலநிலை மாற்ற ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி.

உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

எச்சரிக்கை: இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக இனிமேல் விமான பயணங்கள் மிக கடினமானதாக மாறப்போகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் நமது பூமியை வெப்பமாக்கியுள்ளதால் விமான டர்புலன்ஸ் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. கார்பன் துகள்கள் காற்றில் அதிகம் இருப்பதால் காற்றின் வெப்பநிலை அதிகம் ஆகி உள்ளது.

காற்றின் வெப்பம் அதிகம் ஆகி உள்ளதால் விமான டர்புலன்ஸ் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஒரு விமானம் கடுமையான மேக கூட்டங்கள், கடுமையான வெப்பநிலை, கடும் மழை இடையே வேகமாக சீறி செல்லும் போது விமானம் கடுமையாக குலுங்கும். இது போன்ற குலுக்கல்தான் டர்புலன்ஸ் என்று அழைக்கப்படும்.

இதுதான் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு அறிக்கை கூறி உள்ளது. காற்று மாசு காரணமாகவும் இந்த டர்புலன்ஸ் ஏற்படும். இனி விமான பயணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்தானதாக மாறும் என்று அந்த ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அறிக்கை சொல்வது என்ன? : முன்னதாக ஐநா தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்ட எச்சரிக்கையில், எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும். இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.

கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

Climate change can lead to the more turbulence during the flights in coming days says A research

எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும். சுற்றுசூழல் மாறுபாடு ஏற்கனவே உலக நாடுகள் முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. மக்கள் இதை வரும் நாட்களில் வேகமாக உணருவார்கள் என்று இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+