"என்னை முதல்வராக்குங்க.. தமிழக அரசை டிஸ்மிஸ் பண்ணுங்க".. அதிர வைத்த கவர்ச்சி நடிகை.. மக்கள் ஷாக்!
சென்னை: "தமிழக அரசை பிரதமர் மோடி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. என்னை மொதல்ல முதல்வராக்க வேண்டும்.. அப்படி மட்டும் முதல்வராக்கி விட்டால், ஒரே வாரத்தில் இந்த கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன்" என்று கண்டபடி கவர்ச்சி காட்டும் நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார்.
மீரா மிதுன்.. இவர் ஒரு அரசியல்வாதி இல்லை.. மக்களுக்காக சிறை சென்றவர் இல்லை.. எந்தவித போராட்டம், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டவரும் இல்லை.
தினம் தினம் பசி, பட்டினியால் செத்து சுண்ணாம்பு ஆகும் சாமான்ய மக்களுக்காக கூட எதையுமே செய்ததும் இல்லை. இப்படி இருந்தும் தன்னை முதல்வராக்க சொல்கிறார் என்றால் இந்த நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லை.

மீரா மிதுன்
துடிப்புமிக்க, வீர்யமிக்க, பயனுள்ள செயல்களை செய்து புகழை அடையாமல், எதையாவது வம்படியாக பேசி பேசியே ஃபேமஸ் ஆவார்களே.. அந்த லிஸ்ட்டை சேர்ந்தவர்தான் மீரா மிதுன். இவர் துறையே வேறு.. இருந்தாலும் ஒரு பெண் கலைஞர் என்ற முறையில் இவர் ரசிக்கப்படுகிறார்.. அவரது அந்த திறமைக்குரிய மரியாதையை மக்கள் தந்தும் வருகிறார்கள்.

தமிழக அரசு
இந்நிலையில் இவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "இப்போதைய தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தவறிவிட்டது... இதனால் தமிழக அரசை பிரதமர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்... அதோடு தன்னை தமிழக முதல்வராக ஆக்கினால் ஒரே வாரத்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்தே விரட்டுவேன்.. தமிழகத்தில் உள்ள கிரிமினல்கள் எல்லாரையும் ஒரே மாசத்தில் ஜெயிலுக்குள் தள்ளுவேன்.

பிரதமர் மோடி
தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக 2 மாசத்தில் மாற்றுவேன், இந்திய பொருளாதாரத்தையே 6 மாசத்தில் உயர்த்துவேன்... தமிழக அமைச்சர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள்... நான் பிஎஸ்ஸி மைக்ரோபயாலஜியும், எம்எஸ்ஸி பயோடெக்னாலஜியும் படிச்சிருக்கிறேன்.. அதனால் பிரதமர் மோடி தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் நான் என்னுடைய தாய் நாட்டை காப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அபாயம்
யார் வேண்டுமானாலும் இந்த ஜனநாயக நாட்டில் கருத்து சொல்லலாம்.. விமர்சிக்கலாம்.. அதற்கு அனைத்து உரிமையும் உள்ளது.. ஆனால், திடீரென தமிழக அரசை இவர் குறை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. நாட்டில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை போய் கொண்டிருக்கிறது? தமிழக அரசு ஒவ்வொரு நிமிஷமும் இந்த தொற்றை தடுக்க படாத பாடு பட்டு கொண்டிருக்கிறது.

அபத்தம்
ஆயிரக்கணக்கான டாக்டர்கள் உயிரை பணயம் வைத்து நோயாளிகளை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்.. இந்நிலையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அரசை டிஸ்மிஸ் செய்ய சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது... அதை விட தன்னை முதல்வராக்க வேண்டும் என்று எந்த கட்சி, அமைப்பையும் சாராத ஒருவர் கோரிக்கை விடுத்திருப்பது எவ்வளவு நையாண்டியாக இருக்கிறது?!!

டிஸ்மிஸ்?
மத்திய, மாநில அரசுகளை சர்ச்சைக்குரிய வகையில் மிக மோசமாக விமர்சித்தும் உள்ளார் மீரா.. இந்திய அரசியலமைப்பு சட்டம் இவர்களுக்கு எல்லாம் எவ்வளவு நகைப்புக்குரியதாகி விட்டது? என்பது அதிர்ச்சியாக உள்ளது.. அரசுகளை குறை சொல்லலாம், ஆனால் தாங்கள் ஃபேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய விமர்சனங்கள் ஏற்க முடியாத ஒன்று!! எதிர்க்கட்சிகள் கூட டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் அரசுக்கு ஒத்துழைக்கின்றன.. ஆனால் இந்த கவர்ச்சி நடிகை போட்டுள்ள இந்த டிவீட்.. தமிழக அரசு இவரை கவனிக்க வேண்டும்.
-
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications