ஒரு "பந்து" கூட வேஸ்ட் ஆக்காமல்.. அடுத்தடுத்து அதிரடி.. திக்குமுக்காட வைக்கும் எடப்பாடியார்..!
அடுத்தடுத்த அதிரடிகளை விடாமல் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: நாளுக்கு நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து திட்டங்களும், செயல்பாடுகளும் அப்படியே அவருக்கு வாக்குகளாக அமையக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சில நாட்களாகவே எடப்பாடியார் டென்ஷனில் உள்ளார்.. நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கும் திமுகவை சமாளிக்க வேண்டி உள்ளது.. அவர்களின் வியூகங்களுக்கு இணையான வியூகங்களை தன் தரப்பிலும் எடுக்க வேண்டி உள்ளது.
இன்னொரு பக்கம் கட்சிக்குள் ஏகப்பட்ட உட்பூசல்கள் வளர்ந்து வருகின்றன.. இன்னும் சீட் ஒதுக்கீடு விவகாரமே ஆரம்பமாகவில்லை.. அப்போதுதான் மேலும் பூசல் வெடித்து கிளம்பும். அதையும் அவர் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சின்னம்மா
இது எல்லாவற்றிற்கும் மேலாக சசிகலாவின் வருகை லேசான கலக்கத்தை எடப்பாடியாருக்கு தந்து வருகிறது.. யாரெல்லாம் சசிகலாவின் ஆதரவாளர்களோ, யாரெல்லாம் சசிகலாவை வரவேற்று பேசி வருகிறார்களோ அவர்களை எல்லாம் கட்டம் கட்டி வருகிறார் எடப்பாடியார்.. நேற்றுகூட ஒருவர், சின்னம்மாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டவும், அதிரடி நடவடிக்கையை ஆன் தி ஸ்பாட்டில் எடுத்து காட்டினார் எடப்பாடியார்.

விமர்சனம்
என்னதான் சசிகலா உள்ளே நுழைந்தாலும், அல்லது பாஜகவினால் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டாலும், தன் பொறுப்பினையும், மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மிக சரியாக செய்து வருகிறார் எடப்பாடியார்.. அந்த வகையில்தான், யார் தன்னை விமர்சித்தாலும் பரவாயில்லை என்று துணிந்து ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டினார்..

எடப்பாடியார்
இந்த மகிழ்ச்சியை முழுசாக அனுபவித்து முடிக்கும் முன்பே, அடுத்த அறிவிப்பான வேதா இல்ல அறிவிப்பையும் தடாலடியாக அறிவித்து ரத்தத்தின் ரத்தங்களை ஒரே நாளில் நேற்று திக்குமுக்காட செய்துவிட்டார் எடப்பாடியார்..!

தேர்தல்
இது எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து மகிழ்ச்சிக்கடலில் அதிமுக தொண்டர்களை மூழ்கடித்து விட்டார்... யாரையும் நம்பாமல், தன்னையும், அதிமுக தொண்டர்களையும், மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்தி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருவதாகவும், இவை அனைத்துமே அவருக்கு தேர்தலில் சாதகமான முடிவுகளையே கொண்டு வந்து சேர்க்கும் என்கிறார்கள் அதிமுக நலன்விரும்பிகள்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications