"எடு வண்டியை".. தஞ்சையில் சசிகலா.. மொத்தம் 3 நாள்.. "கவனியுங்கள்".. உளவுத்துறைக்கு போன உத்தரவு!
சசிகலாவின் தஞ்சாவூர் விஜயம் குறித்த செய்திகள் பரபரத்து வருகின்றன
சென்னை: சசிகலாவின் திடீர் தஞ்சை விஜயம் பல்வேறு அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. இந்த பயணம் எதற்காக? ஏன்? என்ற கேள்விகளும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
சசிகலாவின் வருகை இந்த முறை தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணக்கு போடப்பட்டது.. ஆனால், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார்.
சென்னையில் இருந்து வந்தவர் எந்த அதிரடியையும் கையில் எடுக்கவில்லை.. அதேபோல, விலகல் அறிவிப்புக்கு பின்னரும் எதுவும் செய்யவில்லை.. எதற்காக இவர் அமைதியாகவே இருக்கிறார்? நிஜமாகவே இவர் அரசியலில் இருந்து ஏன் ஒதுங்கினார் என்ற கேள்விகளும் இன்றும் அடங்கவில்லை.

நடராஜன்
தினகரன் ஒரு பக்கம் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சமயம், திடீரென தஞ்சைக்கு பயணமாகி உள்ளார் சசிகலா.. கணவர் நடராஜனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடக்கிறது.. அந்த விழா நடராஜனின் விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் நடக்கிறது. இதற்குதான் சசிகலா கிளம்பி சென்றார்.. இன்று நடந்த கிடாவெட்டு பூஜையிலும் கலந்து கொண்டார்..

அஞ்சலி
சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் கல்யாணமான புதுசில் இந்த கோயிலுக்கு வந்தார்களாம்.. அதோடு இப்போதுதான் 30 வருஷம் கழித்து சசிகலா சென்றதாக கூறப்படுகிறது... மேலும் வரும் 20-ம் தேதி நடராஜனின் 3-ம் வருட நினைவு நாளும் வருகிறது.. அதனால், அந்த சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று ஏற்கனவே செய்திகளும் கசிந்தபடி வந்ததால், இந்த தகவலும் உண்மை என தெரியவருகிறது. இதை தவிர நெருக்கமான உறவினர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சந்திப்பு
எனினும் சொந்த காரணங்களுக்காக மட்டும் தஞ்சாவூருக்கு சசிகலா சென்றதாக எடுத்து கொள்ளலாமா என்றால், அதுதான் இல்லை.. இந்த தஞ்சை விஜயத்திலும் அரசியல் இருக்கிறதாம். மொத்தம் 3 நாள் தஞ்சாவூருக்கு பிளான் செய்துள்ளார் சசிகலா.. அரசியல் பிரபலங்கள் சிலரை சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் யார் யார் என்று தெரியவில்லை.

வேட்பாளர்கள்
ஒருவேளை தினகரன் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், சமுதாய ஓட்டுக்களை திருப்பிவிடும் மறைமுகமான முயற்சியில் சசிகலா ஈடுபடலாம் அல்லது வேட்பாளர்களில் யாராவது சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என்றும் யூகங்கள் வலம்வருகின்றன.

வைத்திலிங்கம்
இதனிடையே, சசிகலா தஞ்சைக்கு சமயம்தான், அங்கு முதல்வரும் பிரச்சாரம் செய்துள்ளார்.. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சசிகலா தொடர்பாக பேசியதாக தெரிகிறது.. அதேபோல, வைத்திலிங்கத்துடனும் இதுகுறித்து விவாதித்ததாக கூறுகிறார்கள்.. இதையடுத்து, சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்று கண்காணியுங்கள் என்று வைத்திலிங்கத்துக்கு எடப்பாடியார், சொன்னாராம்.. வழக்கம்போல உளவுத்துறையும் இது சம்பந்தமான அசைன்மென்ட் தந்துள்ளதாக தெரிகிறது.

3 நாள்
அதிமுக தரப்பில் யாராவது சென்று சந்திப்பார்களா? அல்லது ஆதரவு கேட்பார்களா? என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. ஆக மொத்தம் இந்த 3 நாளில் சசிகலாவின் அரசியல் தஞ்சாவூரில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்...!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications