"தேமுதிக".. டென்ஷன் ஆன எடப்பாடியார்.. பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி தொகுதி கேட்ட முருகன்!
எடப்பாடி பழனிசாமியிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு நெருக்கி வருகிறது பாஜக
சென்னை: தேமுதிக விலகியதை அடுத்து, அதிமுக கூட்டணியில் பெரும் நெருக்கடியும் குழப்பமும் கூடியுள்ளது.!
அதிக சீட் ஒதுக்கப்படாததால்தான் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது என்று கூறப்பட்டாலும், வேறு சில காரணங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தேமுதிக விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாகவும், தொகுதிகள் விஷயத்தில் சற்று தராளமும் காட்டியிருக்கலாம் என்று பலரும் சொல்ல தொடங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, எல்.முருகன் உள்ளிட்டோரும், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் அதிமுக தலைமை அலுவலகத்தில், தங்கள் சீட் விஷயமாக சந்தித்து பேசினர்.. அப்போதுதான் தேமுதிக சம்பந்தப்பட்ட பேச்சும் அவர்களிடம் எழுந்துள்ளது.

முருகன்
இவ்வளவு கெடுபிடி காட்டியிருக்க தேவையில்லை என்று எல்.முருகனே வாய்விட்டு சொல்லி இருக்கிறார்.. ஆனால், அதை கேட்டு முதல்வர் எடப்பாடியார் டென்ஷன் ஆகிவிட்டாராம்.. "அவங்க தொகுதிகள் தவிர, வேற என்னவெல்லாம் கேட்டாங்க தெரியுமா? அவங்க கட்சி அன்னைக்கு இருந்த நிலைமை வேற, இன்னைக்கு இருக்கிற நிலைமை வேற.. இப்போ கூட்டணியில் இருக்கிற கட்சிகளின் ஓட்டு வங்கியை ஒவ்வொன்றாக எடுத்து சொன்னோம்.. அப்பவும் அதே பிடிவாதத்தில் இருந்தாங்க" என்று முதல்வர் கூறியுள்ளார்.

தேமுதிக
இதற்கு முருகன், அப்படின்னா, எங்களுக்கு கூடுதல் சீட் தாங்க.. தேமுதிகவுக்கு தொகுதிகள் தரணும்னுதானே எங்களுக்கு கம்மியா தந்தீங்க.. இப்ப அவங்களே கூட்டணியில் இல்லைன்னு ஆனதுக்குப்பறம் எப்படியும் 20 சீட் மிச்சமிருக்குதானே.. அதுல எங்களுக்கு 10 குடுங்க.. எங்க கட்சிக்காரங்க எப்படி களத்தில இறங்கி வேலை பார்ப்பாங்கன்னு மட்டும் பாருங்க" என்றாராம். இதற்கும் எடப்பாடியார் ஒப்புக் கொள்ளவில்லையாம்.. ஒதுக்கினது ஒதுக்கினதுதான் என்று கறாராக சொல்லியதாக தெரிகிறது.

குஷ்பு
உடனே முருகன், "அப்படின்னா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை தாங்க.. ஏன்னா குஷ்புவை கட்சியில் சேர்த்தபோதே அந்த தொகுதி உங்களுக்குன்னுதான் சொல்லி சேர்த்தோம்.. அவங்களும் தொகுதியில் இறங்கிட்டாங்க.. இப்ப போய் சீட் இல்லைன்னு சொன்னால் நல்லா இருக்காது" என்று சொல்ல, அதற்கும் எடப்பாடியார் மறுத்துள்ளார்.. "அதிமுகவின் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமை நிற்க வைக்க எல்லா முயற்சிகளும் செய்து வைத்துள்ளோம்" என்று கூறியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
இதைக்கேட்ட முருகன், "அப்படின்னா திருநெல்வேலியை நயினார் நாகேந்திரனுக்கு தருவதாக ஏற்கனவே சொல்லிட்டோம்.. அதையாவது குடுங்க" என்று கேட்டுள்ளார்.. உடனே ஓபிஎஸ், "இல்லை, அங்கே அவர் 2 முறை தோத்துட்டார்.. அதனால இந்த முறை எங்களுடைய மாவட்ட செயலாளர் கணேச ராஜாவுக்கு ஒதுக்க போகிறோம்" என்று சொன்னாராம்.. இப்படித்தான் இன்னும் சீட் பேரம் அதிமுக - பாஜக இடையே நடந்து வருவதாக தெரிகிறது.

வானதி
கொங்கு மண்டலத்தில்கூட ஏராளமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் வெறும் 4 தான் தரப்பட்டுள்ளது.. அந்த நான்கிலும் கோவை மேற்கு தொகுதி ஒன்றுதான் பலம் வாய்ந்தது.. அதில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.. எனவே, இந்த பாஜக தொகுதி விவகாரம் மேலும் அடுத்த சில நாட்களுக்கு இழுபறியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications