சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"லிஸ்ட்" ரெடி... சாட்டையை கையில் எடுக்கும் எடப்பாடியார்.. இது வேற லெவல் ஐடியா.. திணறும் கட்சிகள்!

எடப்பாடி பழனிசாமி புது அதிரடியை கையில் எடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுக்கு எதிராக இன்னொரு அஸ்திரத்தை எடுக்க போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. அதற்கான துரித வேலையையும் துவங்கி விட்டாராம்...!

Recommended Video

    சென்னை: சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி: 50 பேர் பட்டியலுடன் ஆட்டம் ஆரம்பம்!

    சசிகலாவின் வருகை சற்று கலக்கத்தை எடப்பாடியாருக்கு ஏற்படுத்தி இருந்தாலும், அதை முறியடிக்கும் வகையில் ஏராளமான அதிரடிகளை அடுத்தடுத்து செய்ய ஆரம்பித்துள்ளார்.

    சசிகலாவின் பேச்சை யாரும் எடுக்க கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டிருந்தாலும், யாராவது அவருடன் தொடர்பில் இருந்து வருகின்றனரா என்று உளவுத்துறையும் ஒருபக்கம் கண்காணித்து வருகிறது..

     சமாதானம்

    சமாதானம்

    அப்படியே யாராவது இருந்தாலும், உடனடியாக அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்படுகிறது.. அதன் அடிப்படையில் அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் அதிமுக இறங்கி வருகிறது.. இதேபோல இன்னொரு வழியையும் கையாண்டு வருகிறது.. யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு பொறுப்பை தந்து, தங்களிடமே நிரந்தரமாக வைத்து கொள்ளும் வழியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

    பச்சைமால்

    பச்சைமால்

    அந்த வகையில், முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது.. இவர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.. அமமுகவில் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து வெளியேறி, அதிமுகவில் இணைந்தார்.. ஆனால் ஒன்றரை வருஷமாக இவருக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் இருந்தார்.. தனக்கு அதிமுகவில் பதவி எதுவும் வழங்காததால் விரக்தியிலிருந்த பச்சைமால், சசிகலா அணிக்குத் தாவும் நிர்வாகிகளின் லிஸ்ட்டிலும் இருந்தாராம்..

     ஜெயலலிதா

    ஜெயலலிதா

    இவரைதான் சரிக்கட்டி, சமாதானப்படுத்துவதற்காக திடீரென அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தது அதிமுக தலைமை. அதுமட்டுமல்ல, இப்போது மற்றொரு வியூகத்தையும் எடுத்துள்ளது.. அதன்படி, மொத்தம் 50 வேட்பாளர்கள் லிஸ்ட்டை அதிரடியாக அறிவிக்க போகிறாராம் எடப்பாடியார்.. அதுவும் ஜெயலலிதா பிறந்த நாள் அன்றே அந்த லிஸ்ட்டை வெளியிட போகிறாராம்..

    லிஸ்ட்

    லிஸ்ட்

    இந்த 50 பேருமே முக்கிய புள்ளிகள், தவிர்க்க முடியாத தலைகள்.. இதற்கு 2 காரணங்கள் இருக்கின்றனவாம்.. ஒன்று, இவர்கள் சசிகலா தரப்பில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இப்போதே லிஸ்ட்டில்இடம்பெற செய்வது. மற்றொன்று, சசிகலா தன் சார்பான பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு தன் வலிமையை பிரதிபலிக்க செய்வதற்காகவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் எடப்பாடியார்.

    English summary
    CM Edapadi Palanisamys next top level strategy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X