"அந்த 50 பேர்".. எடப்பாடியாருக்கு வந்த சிக்கல்.. "எக்ஸ்ஸே" இப்டி செய்யலாமா.. குழப்பத்தில் அதிமுக
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் புது சிக்கல் ஒன்று எழுந்துள்ளது
சென்னை: அதிமுகவை மிக முக்கிய கவலை ஒன்று சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.. அது அந்த 50 பேர்தான்..!
இந்த தேர்தல் திமுகவை போலவே அதிமுகவுக்கும் மிக முக்கியமானது.. அதனால்தான் கிட்டத்தட்ட 6 மாசமாகவே தேர்தல் சம்பந்தமான விவகாரங்களில் அதிமுக தலைமை அவசரப்படாமல், அதே நேரத்தில் பொறுமை காத்து ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறது.
கூட்டணி வைக்காமல் போட்டியிட முடியுமா என்றுகூட ஒருமுறை யோசித்ததாக தெரிகிறது.. ஆனால், வடமாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவால் சமாளிக்க முடியாது என்பதால், கூட்டணிக்கான அவசியம் உணரப்பட்டது.. அதனால்தான் தைலாபுரத்துக்கு ஓடி ஓடி சென்று கூட்டணியை தக்க வைக்க முயன்றது.

விஜயகாந்த்
இதில் கருணாஸ் சென்றுவிட்டார்.. சரத்குமார் தாவிவிட்டார்.. விஜயகாந்த் விலகிவிட்டார்.. இப்படி பல அதிருப்திகளுக்கு மத்தியில்தான் கூட்டணி சமாச்சாரமே அரங்கேறியது.. கூட்டணிகளுக்கே இந்த நிலைமை என்றால், கட்சிக்குள் அதிருப்திகளை நிறைய சம்பாதிக்க வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. எல்லாருமே சீட் கேட்க தொடங்கிவிட்டார்கள்.. இரு தலைமைகளையும் தங்கள் ஆதரவாளர்கள் அழுத்தம் தர ஆரம்பித்தனர்.

அதிருப்தி
ஆனால், தலைமை அவசரப்படவில்லை.. பார்த்து பார்த்துதான் சீட் ஒதுக்கியது.. எனினும் 50 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க முடியவில்லை.. இந்த 50 பேருமே சீட் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர் போலும்.. அதனால்தான் அதிருப்தியின் எல்லைக்கே போய்விட்டனர்.. இதில் பலர் தங்கள் ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளவில்லை.. சீட் இல்லாவிட்டாலும் வேறு வகையில் கட்சி நம்மை தாங்கி பிடிக்கும் என்று நம்பி, தொடர்ந்து கட்சி வேலை செய்கின்றனர்.

மிரட்டல்
வேறு சிலரோ ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று ஆரம்பித்துவிட்டனர்.. வேறு சிலர் கதறி கதறி அழுது கொண்டிருக்கிறார்கள்.. வேறு சிலரோ, இதற்காகவே காத்திருந்தது போல, ஒரே நாளில் டக்கென வேறு கட்சிக்கு ஜம்ப் ஆகிவிட்டனர்.. இன்னும் சிலர் அதிமுக தலைமைக்கு மிரட்டலும் விடுத்தனர்... ஆனால், இந்த மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக தலைமை மசியாது என்பது வேறு விஷயம்.. எனினும், இதெல்லாம் வேறு சில தர்மசங்கடங்களை அதிமுகவுக்கு தந்து வருவதாகவே தெரிகிறது.

சாத்தூர் ராஜவர்மன்
அதாவது சீட் கிடைக்காமல் கட்சி மாறியவர்கள், அதிமுகவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி வருகிறார்கள்.. குறிப்பாக, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஒரே நாளில் சீட் கிடைத்த கையோடு தெருதெருவாக அமைச்சர்களுக்கு எதிராக பேசி வருகிறார்... அந்த 2 அமைச்சர்களும் ஏராளமாக சொத்து குவித்துள்ளனர் என்று கூறி வருகிறார்.. அதாவது, இதே குற்றச்சாட்டை முன்வைத்துதான் திமுகவும் அந்த 2 அமைச்சர்கள் மீது குற்றம் சொல்லி வரும் நிலையில், அதிமுகவில் இருந்தவரும் இதையே பேசிவருவது அதிர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.

தோப்பு வெங்கடாசலம்
இன்னொரு சிக்கல் என்னவென்றால், சீட் கிடைக்காத விரக்தி அடைந்த பலரும் சுயேச்சையாக போட்டியிட களம் இறங்கிவிட்டனர்.. இதில் ஒருசிலர் தொகுதிக்குள் பலம் பொருந்தியவர்கள் ஆவார்கள்.. உதாரணமாக பெருந்துறையில் தோப்பு வெங்கடாச்சலம் போன்றவர்கள்.. இவர்கள் எல்லாம் சீனியர்கள்.. தொகுதிகள் பல நலத்திட்டங்களை செய்து வைத்து மக்களின் நன்மதிப்பை நேரடியாக பெற்றவர்கள்.. இன்னமும் செல்வாக்கில் உள்ளவர்கள்.. எனினும் உட்கட்சி பூசல் காரணமாக இவர்களுக்கு தலைமை சீட் தர மறுத்துள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் சுயேச்சையில் இறங்கிவிட்டனர்.

திமுக
இதனால், அதிமுக நேரடியாக களம் இறக்குபவர்களுக்கு அந்தந்த தொகுதியில் ஓட்டுக்கள் பிரியும் சூழலும் ஏற்பட்டுள்ளது.. இது திமுகவுக்கு பிளஸ் ஆகி போகும் வாய்ப்பையும் அள்ளி தரும் என்றே நம்பப்படுகிறது.. ஆக மொத்தம் திமுகவை சமாளிப்பதைவிட, அதிமுகவில் சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்கு தாவியவர்களையும், சுயேச்சையாக நிற்பவர்களையும் சமாளிக்கவே பெரும்பாடாக இருக்கும் போல தெரிகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications