சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking Live News: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல் பாதிப்பு: 5 பேர் கொண்ட மத்திய குழு வருகை- வீடியோ

    தஞ்சை: புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை கோடியக்கரைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்

    CM Edappadi Palanisamy gives Gaja relief materials to Nagapattinam people live updates

    Newest First Oldest First
    12:10 PM, 29 Nov

    தென் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்

    தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்

    சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் - வானிலை மையம்

    வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 10 செமீ மழை பெய்துள்ளது

    புயல் அபாயம் இப்போதைக்கு எதுவும் இல்லை - பாலச்சந்திரன்

    12:10 PM, 29 Nov

    தென் தமிழக கடலோரத்தையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது

    மாலத்தீவுகள் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது

    12:08 PM, 29 Nov

    சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

    திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை

    8:49 AM, 29 Nov

    டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை

    திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் மழை

    புதுச்சேரியில் பல பகுதிகளில் நல்ல மழை

    சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு

    8:02 AM, 29 Nov

    டெல்டா மாவட்டங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு
    8:01 AM, 29 Nov

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை

    மழை தொடருவதால் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்

    7:50 AM, 29 Nov

    புயல் பாதித்த தமிழகத்திற்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதி உதவி

    கேரள நிதி உதவிக்கு கமல்ஹாசன் வரவேற்பு

    2:44 PM, 28 Nov

    நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது- முதல்வர்

    7886 ஹெக்டேரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளன- முதல்வர் பேட்டி

    1:00 PM, 28 Nov

    நாகை மாவட்டம் கோயில்பத்து பகுதியில் முதல்வர் ஆய்வு

    சேதமடைந்துள்ள அரசின் உணவு தானிய கிடங்கில் ஆய்வு

    10:24 AM, 28 Nov

    நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் விவசாயிகளுடன் முதல்வர் சந்திப்பு

    அமைச்சர்கள் இங்கேயே முகாமிட்டு இருப்பதால் எல்லா விவரமும் தெரியும்-முதல்வர் பேச்சு

    9:32 AM, 28 Nov

    நாகையில் நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

    9:29 AM, 28 Nov

    நாகையில் நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு

    12:21 PM, 27 Nov

    கஜா சேதம்: இலவச மரக்கன்றுகள், செடிகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

    விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு

    7:53 AM, 27 Nov

    கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று ரயிலில் செல்கிறார் முதல்வர்

    ஏற்கனவே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டிருந்தார் முதல்வர்

    நாளை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு காரில் சென்று ஆய்வு நடத்துகிறார்

    6:35 PM, 26 Nov

    நாகப்பட்டனத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

    புயல் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து வருவதால் விடுமுறை விடப்படுகிறது

    4:04 PM, 26 Nov

    புயல் பாதித்த பகுதிகளில் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

    திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்

    ரயில் மூலம் சென்று ஆய்வு செய்கிறார்

    20ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சைக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார் முதல்வர்

    வான்வழியாக ஆய்வு செய்ததால் சலசலப்பு

    முதல் முறையாக புயல் பாதித்த நாகைக்கு முதல்வர் வருகிறார்

    11:43 AM, 26 Nov

    கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் நிலை மாறவில்லை - டிடிவி தினகரன்

    பாதிக்கப்பட்ட மக்களோடு அமமுக தோளோடு தோள் நின்று போராடும் - டிடிவி தினகரன்

    11:42 AM, 26 Nov

    டெல்டா மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர் - டிடிவி தினகரன்

    அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்

    நிவாரணத்திற்கான உத்தரவாதத்தை அரசு மக்களுக்கு தர வேண்டும் - டிடிவி தினகரன்

    10:22 AM, 26 Nov

    கஜா சேதம்: நாகை கோவில்பத்து பகுதியில் மத்தியக்குழுவினர் ஆய்வு

    ஆசியாவின் 2-வது பெரிய உணவு தானிய சேமிப்பு கிடங்கில் மத்தியக்குழுவினர் ஆய்வு

    10:19 AM, 26 Nov

    பட்டுக்கோட்டை : பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் மக்கள் சாலை மறியல்

    கஜா புயல் வீசி 11 நாளாகியும் மின்சாரம், குடிநீர் வழங்கவில்லை என்று போராட்டம்

    மறியலால் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

    8:19 AM, 26 Nov

    கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு இன்று ஆலோசனை

    இன்று கடைசி நாள் ஆய்வை முடித்த பின் ஆலோசனை

    நாளை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

    7:49 AM, 26 Nov

    புதுக்கோட்டை: நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை

    கஜா புயல் சேதத்தால் மனமுடைந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை

    அவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததால் பூச்சி மருந்து சாப்பிட்டார்

    7:49 AM, 26 Nov

    கஜா சேதம் : மத்தியக்குழு இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது

    டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழு இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது

    நேற்று திருவாரூர், தஞ்சாவூரில் ஆய்வு செய்தது

    இந்த மாத இறுதிக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மத்தியக்குழு

    7:49 AM, 26 Nov

    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்

    வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    வங்க கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை

    டெல்டாவில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

    4:20 PM, 25 Nov

    திருவாரூர்: முத்துப்பேட்டையில் மத்தியக்குழு ஆய்வு

    ஜாம்பவானோடை கிராமத்தில் புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது

    9:42 AM, 25 Nov

    திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் பலி

    கோட்டூர் அருகே கோமளப்பேட்டை முகாமில் இருந்த பக்கிரியம்மாள் (65) பலி

    போதிய சுகாதாரம், உணவு இல்லாததால் உடல் நலிவடைந்த பக்கிரியம்மாள் பலி

    9:08 AM, 25 Nov

    தஞ்சை : மத்திய அரசின் கஜா புயல் ஆய்வு குழுவிற்கு மக்கள் எதிர்ப்பு

    ஒரத்தநாட்டில் மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

    டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்

    8:47 AM, 25 Nov

    கஜா சேத மதிப்பீட்டை உடனே கணக்கிட முடியாது - மத்திய குழு

    சேதம் அதிகம் இருப்பதால் உடனே கணக்கீடு செய்ய முடியாது - மத்திய குழு

    முழு ஆய்வு முடிந்த பின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மத்திய குழு

    ஆய்வு பணியில் 7 பேர் ஈடுப்பட்டு இருக்கிறார்கள் - மத்திய குழு

    8:47 AM, 25 Nov

    கஜா புயல் : மத்திய குழு இன்றும் ஆய்வு செய்யும்

    புதுக்கோட்டையில் மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது

    தஞ்சாவூர், திருவாரூரில் இன்று மத்திய குழு ஆய்வு செய்யும்

    8:47 AM, 25 Nov

    கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு உதவி வருகிறது - தமிழிசை மத்திய அரசின் உதவி இன்றி மாநில அரசு இவ்வளவு வேகமாக செயல்பட முடியாது

    மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள் - தமிழிசை

    மத்திய அரசின் உதவியோடுதான் பணிகளே நடக்கிறது

    என்னால் தினமும் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடியாது - தமிழிசை

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

    READ MORE

    English summary
    Report will be submitted after Nov.27, says Central Committee
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X