கொரோனா கொடுமை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிச் செயலாளர் தாமோதரன் பலி
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் உயிரிழந்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரிக்கிறது. கடந்த 14 நாட்களாக ஆயிரத்திற்கும் மேல் தினசரி 1000த்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் பாதிப்புக்குள்ளாகினர். நேற்றுதான் அது ஆயிரத்துக்கு கீழே குறைந்தது.
நேற்று, சென்னையில் மட்டும் 919 பாதிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி முதல், 12 நாட்களுக்கு சென்னை மற்றும் அண்டையிலுள்ள 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

அறிகுறிகள்
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன். 2 நாள் முன்பாகத்தான் அவர் சிகிச்சைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. சளி உள்ளிட்ட அறிகுறிகள் அவருக்கு தென்பட்டதாம்.

உயிரிழப்பு
இந்த நிலையில், தாமோதரன், இன்று காலை, உயிரிழந்துள்ளார். எனவே அலுவலகத்தில், தனிச்செயலாளர் உடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பத்திரிக்கையாளர்கள் அறை
ஏற்கனவே, முதல்வரின் புகைப்படக் கலைஞருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் அறை பூட்டப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்படும் பணிகள் நடைபெறுகிறது.

ஸ்டாலின் ட்வீட்
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முதல்வரின் தனிச்செயலாளர் தாமோதரன், கொரோனா காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்! அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை முதல்வர் உறுதி செய்திட வேண்டும். இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications