1100ல் கூப்பிட்டால் அரசு உதவி.. பயிர்கடன் ரத்து ரசீது- அடுத்தடுத்து அதிரடிகளால் அசரடிக்கும் முதல்வர்

தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயக்கடன் ரத்து, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என விவசாயிகளின் மனதை குளிர வைக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வார் பழனிச்சாமி இன்று 12,110 கோடி பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதோடு தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களின் மனதை கவர்ந்து வருகிறார். அறிவிப்போடு நின்று விடாமல் அரசாணை வெளியிட்டு அதனை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார்.

இன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து , விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்ட, " முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தை ( Integrated and Inclusive Public Grievance CM Helpline Management System - IIPGCMS ) " துவக்கி வைத்தார்.

குறை தீர்ப்பு மேலாண்மை திட்டம்

குறை தீர்ப்பு மேலாண்மை திட்டம்

சட்டசபையில் முதல்வர் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த போது, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் " செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வரின் உதவி அழைப்பு மையம்

முதல்வரின் உதவி அழைப்பு மையம்

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், ராஜீவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முதல்வரின் உதவி அழைப்பு மையத்தை ( CM Helpline Call Center ) தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

குறைகளை சொல்லுங்க உடனடி தீர்வு

குறைகளை சொல்லுங்க உடனடி தீர்வு

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும் , [email protected] என்று மின்னஞ்சல் வாயிலாகவும், CMHelpline Citizen என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும் , https://twitter.com/cmhelpline_tn என்ற டிவிட்டர் வாயிலாகவும் https://www.facebook.com/CM-Hepline-TN என்ற பேஸ்புக் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

உடனடி நடவடிக்கை

உடனடி நடவடிக்கை

இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு அரசுத் துறைகளுக்கான குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவு செய்யலாம். இதன்மூலம் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி, குறைதீர்க்கும் முகாம், இணையதளம், சமூக ஊடகங்கள், கைப்பேசி செயலி, மின்னஞ்சல் மூலமாக பெறப்படும் மனுக்கள் மீது இத்திட்டத்தின் வாயிலாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்தில் பொதுமக்களின் குறைகளை விரைந்து களைந்திட அவர்களின் ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும்.

எஸ்எம்எம் தகவல்

எஸ்எம்எம் தகவல்

வேலைவாய்ப்பு கோரும் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு பெற்றிட வழிவகை செய்யப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர், அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

முதல்வர் கொடுத்த சான்றிதழ்

முதல்வர் கொடுத்த சான்றிதழ்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

அரசு அரசாணை

அரசு அரசாணை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 5.2.2021 அன்று சட்டமன்ற பேரவை விதி எண் . 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் , தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 8.2.2021 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ்

பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ்

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று 31.1.2021 அன்று நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

விவசாயிகளின் முதல்வர்

விவசாயிகளின் முதல்வர்

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு செல்லூர் கே . ராஜூ, உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சட்டசபையில் அறிவித்த கையோடு சூட்டோடு சூட்டாக அரசாணை வெளியிட்டு ரசீதுகளையும் வழங்கி விவசாயிகளின் முதல்வர் என்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் பழனிச்சாமி.

டெக்னாலஜி முதல்வரின்

டெக்னாலஜி முதல்வரின்

காகிதத்தில் மனு எழுதி கொடுத்து அதை படித்து குறைகளை தீர்ப்பது எல்லால் ஓல்டு ஸ்டைல். 1100ல் அழைங்க உதவி வீடு தேடி வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது கூறியிருந்தார். சொன்னது போல செயல்படுத்தி விட்டார் முதல்வர் பழனிச்சாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+