கடைசியா ஒன்று கேட்கிறேன்.. வாக்கிங் போன முதல்வரை மறித்த பெண்.. பளீர் கேள்வி.. சுவாரசிய சம்பவம்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடல் நிகழ்த்தினார்கள். முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க, அதற்கு முதல்வரும் இயல்பாக பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்து உள்ளது.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொதுவாக பிட்னஸில் அதிக கவனம் செலுத்த கூடியவர். தனது உடலை நன்றாக வைத்துக்கொள்ள அடிக்கடி சைக்கிளிங் செல்வார். இந்தியாவிலேயே அடிக்கடி சைக்கிளிங் செய்யும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.
அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் ஜிம்மிற்கு செல்வதும், நேரம் கிடைக்கும் போது வாக்கிங் செல்வதும் வழக்கம். இந்த நிலையில்தான் இன்று சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்..

ஸ்டாலின் பாதுகாப்பு
அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார். பீச் நிற பனியன் அணிந்து கொண்டு பெரிய பாதுகாப்பு இல்லாமல், இயல்பாக காலையில் வாக்கிங் சென்றார். அவரிடம் அங்கு இருந்த பலர் அடிக்கடி வந்து பேசினார்கள். தேர்தலில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்களைதெரிவித்தனர். பலர் உங்கள் ஆட்சி நன்றாக உள்ளது சார் என்றெல்லாம் குறிப்பிட்டனர். இன்னும் சிலர் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்.

ஸ்டாலின் நடைபயிற்சி
அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரம் கொடுத்து, நடந்தபடியே பதில் அளித்தார். அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களுடன் ஸ்டாலின் இயல்பாக உரையாடினார். முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் அங்கு வந்த பெண் ஒருவர், சார் இரு வருடங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் உங்களை சந்தித்தேன். . உங்களோடு அப்போது செல்பி எடுக்க முடியவில்லை. நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்று அன்று நான் கூறினேன். நீங்கள் தேர்தலில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று கூறினேன். உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறன்.

வீடியோ
தற்போது அதே போல் நீங்கள் தேர்தலில் வென்றுவிட்டீர்கள். நீங்க ஆட்சிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க. உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. திட்டங்களை சிறப்பாக கொண்டு வருகிறீர்கள். உங்கள் ஆட்சி இனியும் அப்படியே தொடர வேண்டும், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்" என்று கூறினார்.

வெற்றி
அதன்பின் அவர் கேட்ட கேள்வி ஒன்று அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. "கடைசியா ஒன்று கேட்கிறேன் சார், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க? எப்படி சார் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டார் .அதற்கு முதல்வர் ஸ்டாலின் நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார். இதை கேட்டதும் அந்த பகுதி கலகலப்பானது. இதற்கு அந்த பெண் ஆமாம் சார்.. நானும் அந்த வீடியோவையும் யூடியூப்பில் பார்த்து இருக்கிறேன் சார் என்று அந்த பெண் கூறினார்.

நம்பிக்கை
அதன்பின் கால்பந்து விளையாட்டிற்காக ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் நன்றாக ஆடுவார் என்று நம்புகிறோம். அவர் வெற்றியுடன் திரும்ப வேண்டும். அவர் பயிற்சி எடுக்கும் போது நாங்கள் அவரை பார்த்திருக்கிறோம், என்று அந்த பெண் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications