சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிர லாக்டவுன் முதல் வேக்சின் வரை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு.. முதல்வர் ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் 5 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். வேக்சின் தொடங்கி லாக்டவுன் கட்டுப்பாடுகள் வரை 5 முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Recommended Video

    Lockdown முதல் Vaccine வரை முதல்வர் Stalin 5 உத்தரவு | OneIndia Tamil

    தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தினமும் 34 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை தமிழகத்தில்தான் கடந்த 5 நாட்களாக தினசரி கேஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது.

    கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகையை அறிவித்த உத்தரகண்ட் அரசுகொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகையை அறிவித்த உத்தரகண்ட் அரசு

    தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    வேக்சின்

    வேக்சின்

    இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 5 முக்கியமான உத்தரவுகளை இட்டார். அதன்படி உத்தரவு 1- தமிழகத்தில் கொரோனா வேக்சின் போடுவதை அதிகரிக்க வேண்டும். மாவட்டங்களுக்கு உள்ளே கிராமங்கள் வாரியாக வேக்சின்கள் போடுவதை அதிகரிக்க வேண்டும். மக்களிடையே வேக்சின் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

    நிவாரணம்

    நிவாரணம்

    உத்தரவு 2 - கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். நிவாரண தொகை எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

    காய்கறி

    காய்கறி

    உத்தரவு 3 - காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட வேண்டும். எல்லோருக்கும் காய்கறிகள் கிடைக்கும் வகையில் விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

    ஆக்சிஜன்

    ஆக்சிஜன்

    உத்தரவு 4 - மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக எப்போதும் அரசுடன் தயாராக இருக்க வேண்டும். வார் ரூம்கள் மூலம் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    உத்தரவு 5 - தமிழகத்தில் லாக்டவுன் விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். மாவட்ட வாரிய ஆட்சியர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். போலீசாருடன் இணைந்து லாக்டவுன் விதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும், என்று மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    English summary
    Tamilnadu lockdown: CM M K Stalin order 5 importants directives in his meeting with district collectors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X