சர்வதேச விருது வென்ற நாவல்! 'மண்ணோடு இயைந்த மொழி..' பெருமாள் முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளரான பெருமாள் முருகனின், 'ஆளண்டாப் பட்சி' எனும் நாவல் Fire Bird என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கு உயரிய விருது தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் x சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "மண்ணோடு இயைந்த மொழிவழக்கைக் கொண்டு எழுதும் பெருமாள் முருகன் அவர்களது ஆளண்டாப் பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Fire Bird' JCB Prize For Literature எனும் உயரிய விருதை வென்றிருப்பது அறிந்து மகிழ்கிறேன். பெருமாள் முருகன் அவர்களுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப் பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணன் அவர்களுக்கும் பாராட்டுகள்" என்று கூறியுள்ளார்.

அதேபோல, "தொன்மைமிக்க தமிழ் இலக்கிய பரப்பில் தன்னுடைய தனித்துவமிக்க படைப்புகளால் அளப்பரிய பங்களிப்பு செய்துவரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் 'ஆளண்டாப் பட்சி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire Birdக்கு JCB Prize For Literature விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. அவருக்கும் - மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணனுக்கும் என் வாழ்த்துகள்.

எளியவர்களின் வலிகளை - அதற்கான தீர்வுகளை, அம்மக்களின் மொழியிலேயே உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் பணி என்றென்றும் சிறக்கட்டும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications