பலவருட ஏக்கத்திற்கு விடை.. காவல்துறைக்கு சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்.. 10 அசத்தல் அறிவிப்புகள்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் பல வருட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே காவல்துறை மானியக்கோரிக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வந்தது. காவலர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்த்து இந்த மானியக் கோரிக்கைக்காக காத்து இருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையே இது தொடர்பான மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவையில் கடைசி நாளான இன்று காவல்துறை தொடர்பான மானியக்கோரிக்கை அறிவிப்புகள் வெளியானது . இதில் வெளியிடப்பட்ட 10 முக்கியமான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்..

அறிவிப்பு 1
சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்கென 3 கோடியே 60 இலட்சம் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும். காவலர்கள் பல கிலோ மீட்டர் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரிய விடியலாக வந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலை பகுதிகளிலும், தி நகர் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மக்கள் கண்காணிப்பு பணிகளை எளிதாக நடத்த முடியும்.

அறிவிப்பு 2
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பார்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இதற்கு கணினிகள் மற்றும் மென்பொருட்கள் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும். இதற்கான மொத்த தொடர் செலவினம் 33 கோடி ஆகும்.

அறிவிப்பு 3
மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த அடிப்படையில் சேரும் விதமாக அவர்களுக்கு கடலோர காவல்படை குடும்பம் மூலம் ரூபாய் 90 லட்சம் செலவில் ஆறு மாத பயிற்சி வழங்கப்படும் இப்பயிற்சியின் மூலம் இளைஞர்கள் மற்ற இந்திய பாதுகாப்பு பணியில் சேரவும் வாய்ப்பு அதிகரிக்கும். கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய ஆயிரம் மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர் இதற்கான மொத்த செலவு ரூபாய் 3 கோடியே 40 லட்சம் ஆகும்.

அறிவிப்பு 4
பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை இணையதள காணொளி மூலம் சந்தித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதனால் உயர் அதிகாரிகளை பார்க்க பயணம் மேற்கொள்ளவும் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. பொது மக்களின் பிரச்சினைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும் காவல் நிலைய அதிகாரி விசாரணை அறிக்கை அந்த செயலில் தரவேற்றம் செய்யப்படும்.

அறிவிப்பு 5 - படி
காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். இது காவலர்களின் பல நாள் கோரிக்கையாகும். படி உயர்த்திதரும்படி பல வருடமாக வைத்த கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அறிவிப்பு 6 - அடையாள அட்டை
காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும். இதனால் காவலர்கள் தங்களின் பேருந்து பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். பேருந்துகளில் எந்த விதமான பிரச்சனைக்கும், மோதலுக்கு ஆளாகாமல் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

அறிவிப்பு 7 - ஓய்வு
காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காத்திட ஏதுவாகவும் தனது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான ஆளிநர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் ( CLAPP ) APP 1 ரூபாய் 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும்

அறிவிப்பு 8 - மருத்துவ பரிசோதனை
காவலர்களுக்கு ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப் படுவது போல இனி அவர்களின் வாழ்க்கை துணைவியாருக்கும் அளிக்கப்படும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனையும் இதில் சேர்க்கப்படும். காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ள 38 மாவட்டங்கள் மற்றும் 7 மாநகரங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்க தலா ரூபாய் இரண்டு லட்சம் வீதம் ரூபாய் 90 லட்சம் வழங்கப்படும்

அறிவிப்பு 9 - குறைதீர்ப்பு
காவல்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் ஏற்படுத்தப்படும் காவல் நிலையங்களில் உடனடி மற்றும் அவசர செலவுகளை சமாளிக்க ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பறக்க சில்லறை செலவின நிதி உயர்த்தப்படும்

அறிவிப்பு 10 குடியிருப்பு
ஆயிரம் விளக்கு பகுதியில் mansion site என்ற இடத்தில் ரூபாய் 225 கோடியே 26 லட்சம் செலவில் 886 காவலர் தலைமை காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் அலுவல் நிமித்தமாக சென்னை வரும் காவலர்கள் தங்கு வதற்கு ஏதுவாக கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் ரூபாய் 16 கோடியே 20 லட்சம் செலவில் 450 காவலர்கள் தங்குமிடம் கட்டப்படும் காவலர் தலைமை காவலர் உதவி ஆய்வாளர் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வீடு கட்டித்தரும் திட்டம் திருவாரூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் கோவை காந்திபுரத்தில் 1.4 ஏக்கர் இடத்தில் 140 காவல்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ரூபாய் 54 கோடி செலவில் கட்டப்படும்












Click it and Unblock the Notifications