ஒரே மேடையில் ஸ்டாலின், ரஜினிகாந்த்.. திரண்ட அமைச்சர்கள்.. எவ வேலு புத்தக வெளியீட்டில் நெகிழ்ச்சி
சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள ‛கலைஞர் எனும் தாய்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். இந்த நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு. கருணாநிதியுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய எ.வ.வேலு, அவருடனான தனது நினைவுகளை இந்த நூலில் அசைபோட்டுள்ளார்.

கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை எ.வ.வேலுவின் 'கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக அமைச்சர் இந்த நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நூலை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்திருந்தனர். அதன்பிறகு, ‛கலைஞர் எனும் தாய்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
முன்னதாக விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். நூலை எழுதிய அமைச்சர் எ.வ.வேலு வேலு ஏற்புரை வழங்கினார். சீதை பதிப்பகத்தைச் சேர்ந்த கவுரா ராஜசேகர் நன்றியுரை ஆற்றினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications