சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை- டாக்டர் பட்டம் மறுத்த ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
சென்னை: மறைந்த தேச விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா உடல் தமிழ்நாடு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
102 வயது.. இடதுசாரி பெருந்தலைவர் சங்கரய்யா.. முதுமையால் இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டு காலமானார். தமது இளமை காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். இந்திய தேச விடுதலைக்குப் பின்னர் தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக தாம் ஏற்றுக் கொண்ட கம்யூனிச சித்தாந்தத்துக்காக சிறைவாசம் அனுபவித்தார். மக்கள் பிரதிநிதியாக சட்டசபையில் குரல் கொடுத்தார்; மக்கள் உரிமைக்காக 95 வயது வரையிலும் போராட்ட களத்தில் நின்றார். இத்தகைய தீரமிக்க போராளி சங்கரய்யா இன்று காலமானார்.

சங்கரய்யாவின் இறுதி நாட்களிலும் கூட சித்தாந்த எதிரிகள் அவரை அவமரியாதை செய்தனர். சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. ஆனால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிற சான்றிதழில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்தார். ஆளுநர் ரவியின் சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்பதால் சங்கரய்யாவுக்கு செய்யப்பட வேண்டிய சிறப்பு மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சங்கரய்யா இன்று காலமானார். இப்போதும் ஆளுநர் ரவி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தராமல் அவமதித்தது பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இதற்கு பதிலடி தரும் வகையில், சங்கரய்யா உடல் தமிழ்நாடு அரசின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சாதி வர்க்கம் அடக்குமுறை ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications