ஷங்கருடன் "முதல்வன்.." ஐஸ்வர்யா திருமணம்.. மகாபலிபுரம் போய் வாழ்த்திய ஸ்டாலின்.. வைரலான போட்டோ
சென்னை: "பிரம்மாண்ட இயக்குனர்" ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து உள்ளார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்.
வித்தியாசமான கதைகளுடன், பிரம்மாண்டமான திரைப்படம் உருவாக்கி ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் ஷங்கர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல், விஜய், பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் எடுத்துள்ள திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படங்கள்.

இந்தியன் 2 படப் பிடிப்பு
இவரது மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றுதான், கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன். தற்போது கமல்ஹாசனை வைத்து, இந்தியன்-2 திரைப்பட படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

கிரிக்கெட் வீரருடன் திருமணம்
இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மருத்துவராக உள்ள இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். ரோகித்தின் தந்தை தாமோதரன் தொழிலதிபர் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் 'மதுரை பேந்தர்ஸ்' அணியின் உரிமையாளர் ஆகும்.

மகாபலிபுரம் ரெசார்ட்
ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்துக்கும், மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

மாஸ்க் அணிந்தபடி ஸ்டாலின்
முதலமைச்சருடன் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் இணைந்து குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட இந்த திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மணப்பெண்ணும், மணமகனும் மாஸ்க் போடவில்லை, முதல்வர், ஷங்கர் உட்பட அனைவரும் மாஸ்க் போட்டு போட்டோ பிடித்துள்ளனர்.

முதல்வனே, முதல்வனே
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான "முதல்வன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு முதல்வர் எப்படி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதை அந்த திரைப்படத்தில் அருமையான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புடன் விருந்து படைத்து இருப்பார் ஷங்கர். எனவேதான் இப்போது "ஷங்கருடன் முதல்வன்" என்று நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை சிலாகித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications