எந்த தந்தைக்கும் வரக்கூடாத துயரம்.. முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்! வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல்
சென்னை: எந்த ஒரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத துயரத்தை சைதை துரைசாமி அடைந்து இருப்பதாக கூறி, வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், தென் சென்னை மாவட்டக் அதிமுக முன்னாள் செயலாளராகவும் பதவி வகித்தவர் சைதை துரைசாமி. இவர் நடத்தி மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி மூலம் இலவசமாக பயிற்சி பெற்ற பலர் இன்று அரசு அதிகாரிகளாக உயர் பதவிகளில் உள்ளன. இவரது மகன் வெற்றி துரைசாமி ஐஏஎஸ் அகாடமியை கவனித்து வருவதுடன் திரைப்பட இயக்குநராகவும் உள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போனார். காரில் சென்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாயமான வெற்றியின் உடலை 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உடல் சட்லஜ் நதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் குறிப்பில், “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதய பூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் குறிப்பில், “இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications