திராவிட இயக்க கருத்தியலுடன் பின்னிப் பிணைந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
சென்னை: இசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ECI திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்றா சற்குணம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன் பேராயர் எஸ்றா நெருக்கமாக பழகியவர். குறிப்பாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரோடு நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய சுவிசேஷ திருச்சபையின் (ECI) பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர்.
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் தலைவர் கலைஞரோடும் என்னோடும் பங்கேற்றவர். அவரது பிறந்தநாள் அன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மாறாத அன்போடு என்னுடனும் பழகியவர்.
என்னுடைய பிறந்தநாளில் மட்டுமல்லாது, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போதும் என்னை வாழ்த்தத் தவறாதவர். பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் அவர்களின் நலன் பேணும் தளகர்த்தராகவும் செயல்பட்டு வந்ததோடு, அனைத்துச் சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும், அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்படவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேரா சற்குணம் அவர்களின் மறைவு, கிறித்தவப் பெருமக்களுக்கு மட்டுமின்றி, சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் இசிஐ திருச்சபை நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும், இந்திய சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications