Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜா மகள் பவதாரிணி இழப்பு ஈடு செய்ய முடியாதது: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜா மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் ஒரே மகள் பாடகி பவதாரிணி. இளையராஜா இசையமைத்த பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் உலகம் முழுவதும் பவதாரிணிக்கு பெரும் புகழைச் சேர்ததது. இப்பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார் பவதாரிணி.

CM MK Stalin condoles death of Ilayaraja Daughter Bhavatharini

இராமன் அப்துல்லா, தாமிரபரணி, பாரதி, புதிய கீதை உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார் பவதாரிணி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பதவாரிணி இன்று காலமானார். அவரது உடல் நாளை இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் சென்னைக்கு நாளை கொண்டுவரப்படுகிறது.

பாடகி பவதாரிணியின் மறைவு தமிழ் திரை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பவதாரிணியின் மறைவுக்கு திரை உலகத்தினரும் அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பவதாரிணி மறைவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், பிரபல பின்னணி பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமாகிய பதவாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி, பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்; தேனினும் இனிய தனித்துவமான தனது குரல் வளத்தால் இளமையிலேயே ரசிகர்களை ஈர்த்தவர். மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர். பாடகி பவதாரிணி. பவதாரிணியின் திடீர் மறைவு திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்: இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட இலக்கணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர். அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை: சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+