Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்! வழக்கமான பணிகளை தொடர்வது எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் 7 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் இன்னும் 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, திடீரென அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

mk stalin hospital dmk

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை, "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையடுத்து, இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையும் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிகிச்சையில் இருந்தபடி காணொளி வாயிலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தார். அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்தார்.

மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்களைச் சந்தித்து கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கோரிக்கைகள் நிரம்பிய மனு ஒன்றையும், அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுத்து, அதனை பிரதமர் மோடியிடம் அளிக்கச் செய்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். தொடர்ந்து அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தின் வெளியேயும், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் "ஸ்டாலின் வாழ்க.. வாழ்க..." என கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த காரை அவரது மருமகன் சபரீசன் ஓட்டிச் சென்றார். காரில் வீடு திரும்பும்போது அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் உடன் பயணித்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் வீடு வரை அவரது வாகனம் போக்குவரத்து நெரிசலின்றி செல்லும்படி போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

mk stalin hospital dmk

மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்!' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுப்பார், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+