தாயார் மறைவு..ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவினை அடுத்து நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவினை அடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்,வயது 95. வயோதிகம் காரணமாக இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ஆம் தேதி பழனியம்மாள் நாச்சியார் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் கூறினர்.

ஓ பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவரது ட்விட்டர் பதிவில், "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
திமுகவினர் பலர் அன்றைய தினமே ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு கலங்கி நின்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினர்.
எதிரி கட்சியினராக கருதப்பட்ட திமுகவினர் உள்பட பலரும் நேரில் வந்து ஆறுதல் கூறிய நிலையில் அண்ணன் தம்பிகளாக பழகிய முன்னாள் அமைச்சர்கள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிக சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மழை பெய்து கொண்டிருந்த நேரத்திலும் முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிற்கு நேரில் வந்தது கண்டு ஓ.பன்னீர் செல்வம் நெகிழ்ச்சியடைந்தார்.
-
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!












Click it and Unblock the Notifications