சூறாவளி சுற்று பயணம் ஓய்ந்தது! குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து பல வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக மலைநகரமான கொடைக்கானல் செல்ல உள்ளார். தேர்தல் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை அவர் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சுமார் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 மிகுந்த பரபரப்பும் அரசியல் விறுவிறுப்பும் மத்தியில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் தொடர்ந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரசாரம் செய்தார். வெயிலின் கடும் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் தினமும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த முறை மாநிலம் முழுவதும் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சில தொகுதிகளில் 90 சதவீதத்தைத் தாண்டி, 93 சதவீதம் வரை வாக்குப்பதிவு பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே வாக்குகள் பிரியும் வாய்ப்பு இருப்பதால் அது திமுகவுக்கு சாதகமாக அமையலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
அதே நேரத்தில், மற்றொரு தரப்பில் இந்த தேர்தலில் புதிய அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றும், அதிமுக -தவெக கணிசமான வெற்றியைப் பெறக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த பல வாரங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக மலைநகரமான கொடைக்கானல் செல்ல உள்ளார். சனிக்கிழமை அவர் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சுமார் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த காலங்களிலும் தேர்தல் பணிகள் முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்கள், அதேபோல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னரும் அவர் கொடைக்கானலில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறைவும் அதேபோன்று தான் செல்கிறார் என்கின்றனர் அறிவாலய வட்டாரங்கள்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினருடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று காலை துபாய்க்கு புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரசார பணிகளில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்ததால், குடும்பத்தினருடன் சில நாட்கள் ஓய்வு எடுக்க இந்த பயணம் என கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications