விடிய விடிய விடியா வாரிசுகளுக்கு வக்காலத்து.. திமுக ஐடி விங் பொளந்துகட்டியது மட்டன் பிரியாணியை -பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையால் சோர்ந்துபோன திமுக ஐடி விங்கை உற்சாகப்படுத்தவே முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டம் நடத்தியதாக பாஜக தெரிவித்து உள்ளது.

CM MK Stalin held the meeting to cheer up the DMK IT wing which tired of Annamalai

கடந்த சில நாட்களுக்கு முன் திமுக ஐடி விங் நிர்வாகிகள், திமுக ஆதரவு இணைய செயற்பாட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அதில் ஐடி விங் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த கூட்டம் முடிந்த பிறகு மீட்டிங்கை முடிச்சிட்டோம்; இனி அடிமைகளையும், சங்கிகளையும் பொளக்குறோம்." என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை திமுக ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இதனை ரீட்வீட் செய்த தமிழ்நாடு பாஜக அதிகாரப்பூர்வ பக்கத்தில், "ஒரு கட்சியின் ஐடி விங் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம் திமுக ஐடி விங் தான்! "பொளக்கப்போறோம்", "அடிச்சு நவுத்த போறோம்" என்றெல்லாம் பதிவிட்டிருக்கும் இந்த "அறிவார்ந்த" விங், ஆண்டாண்டு காலமாக செய்து வரும் வேலைகள் என்னவென்று அனைவரும் அறிவார்கள்:

1. எதிர்க்கருத்துச் சொல்பவர்களை முதலில் ஆபாசமாகப் பேசுவது, பின்பு அவர்கள் மீது அவதூறு பரப்புவது, கடைசியில் காவல்துறையை ஏவி விடுவது.

2. "மோடி 15 லட்சம் தருவேன்னு சொன்னார்" என்பது முதல் "நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உதயநிதிக்குத் தெரியும்" என்பது வரை கழகப் பொய்களை ஓயாமல் பரப்புவது.

3. யார் என்ன சாதனை செய்திருந்தாலும் அதன் மீது திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு "கலைஞர் தான் காரணம்" என்று சொல்லி கருப்பு-சிவப்பு ஹார்ட்டின் போடுவது.

4. பெண்களை இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் பேசுவது, ஹிந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பது.

5. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பணி - விடிய விடிய விடியா வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்குவது.

இத்தகைய காரியங்களை அல்லும் பகலுமாய் செய்து "Negativity" தலைக்கேறியதாலும், தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து திமுக அரசின் அவலங்களைக் கேள்வி கேட்டு வருவதாலும் சோர்ந்து போன உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்த, ஒரு கேலிக்கூத்து நிகழ்ச்சியைப் பல கோடி ரூபாய் செலவில் திமுக ஐடி விங் நடத்த, கடைசியில் அந்த "அறிவார்ந்தவர்கள்" பொளந்து கட்டியதெல்லாம் அங்கே பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணியைத் தான் என்று நினைக்கும் பொழுது கொள்கை எதிரிகளான எங்களுக்கே பரிதாபம் தோன்றுகிறது!

CM MK Stalin held the meeting to cheer up the DMK IT wing which tired of Annamalai

பி. கு.: திமுகவின் இந்த "Wing" நிகழ்ச்சி நடந்த நாளில் கூட பாஜக தான் டிரெண்டிங் ஆனது என்பது இன்றைய நிலவரங்களின் உண்மையான எடுத்துக்காட்டு!" என்று குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+