Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் 2 பிளான்கள்.. மெகா அறிவிப்புகள் வெளியாகிறதா.. அவருடன் கூட்டணியா?.. பரபரப்பில் அறிவாலயம்

ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தன்னை ஜரூராக தயார் செய்து வருகிறது.. அந்த வகையில் 2 விதமான செய்திகள் தமிழக அரசியலை

வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

உள்ளாட்சி தேர்தலை நடத்த போறீங்களா இல்லையா? என்று கடந்த கால ஆட்சியில் அதிகமாக கேட்டவர் முக ஸ்டாலின்தான்..!

கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளை அதிமுகவே அதிகமாக பெற்றது.. இதற்கு காரணம், திமுகவிற்கு பாதகமான விஷயங்கள் தொகுதிகளில் ஆங்காங்கே நடந்தது..

 அப்செட்

அப்செட்

பல பேர் தொகுதிக்குள் வேலை செய்யவில்லை.. சீட் கிடைக்காத அப்செட் ஒரு பக்கம்.. அதிமுக புள்ளிகளின் உள்ளடி வேலை மறுபக்கம் என திமுக வெற்றி பெற வேண்டிய தொகுதிகளைகூட அதிமுகவே வென்றெடுத்தது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் 9 மாவட்டங்களில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது...

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக, குறிப்பாக திமுக முன்னெடுக்கப்போகும் விஷயங்கள் குறித்து 2 தகவல்கள் கசிந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததுமே முக ஸ்டாலின் உடனடியாக அமைச்சர்கள் கேஎன் நேரு, மற்றும் பெரியகருப்பனுடன் ஆலோசனை நடத்தினார்... தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கும்போது, எதற்காக இப்படி ஒரு திடீர் ஆலோசனை என்றுகூட சந்தேகங்கள் எழுந்தன.. இதற்கு காரணம், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்..!

 வாய்ப்பு

வாய்ப்பு

அதுமட்டுமல்ல, கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு தர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. ஆளும் கட்சியாக இருப்பதால் எளிதாக தேர்தலில் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையும் உள்ளதாலேயே இந்த தேர்தலில் ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

வாக்குறுதி

வாக்குறுதி

இன்னொரு விஷயமும் கசிகிறது.. தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிறைய வாக்குறுதிகளை தந்திருந்தது.. ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே ஒருசில அறிவிப்புகளை வெளியிட்டாலும், பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலும் உள்ளது.. நடக்க போகும் தேர்தலையொட்டி, இவைகள் குறித்த அறிவிப்புகள் ஏதாவது வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..

 அறிவிப்பு

அறிவிப்பு

அதாவது, தேர்தலுக்கு பிறகு இவைகளை அறிவிப்பதைவிட, தேர்தலுக்கு முன்னமேயே இதை செயல்படுத்திவிட்டு, அதன்பிறகு வாக்கு கேட்டால், அது இரட்டிப்பு வெற்றியை ஆளும் தரப்புக்கு அள்ளி தரும் என்றும் திமுக மேலிடம் நினைக்கிறதாம்... இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. தேர்தல் நடக்க போகும் 9 மாவட்டங்களில் பெரும்பாலானவை வடமாவட்டத்தில் உள்ளது.. அதாவது பாமக செல்வாக்கு நிறைந்த மாவட்டங்கள்..

நலத்திட்டங்கள்

நலத்திட்டங்கள்

ஏற்கனவே திமுகவின் மதிப்பு இந்த தேர்தலில் உயர்ந்திருந்தாலும், புதிய நலத்திட்டங்களை, வாக்குறுதிகளில் சொன்னதை அறிவித்தால், அது வடமாவட்ட மக்களின் வாக்குகளை அள்ளவே செய்யும் என்ற நம்பிக்கையும் திமுகவுக்கு உள்ளது. இந்த நேரத்தில் மற்றொரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.. சமீப காலமாகவே பாமகவின் அணுகுமுறையில் மாற்றம் தென்பட்டு வருகிறது.. டாக்டர் ராமதாஸ், 2 நாளைக்கு ஒருமுறை, ஸ்டாலினை புகழ்ந்து கொண்டிருப்பதால், திமுக பக்கம் ஒருவேளை சாயக்கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.. ஒருவேளை இது நடந்தால், திமுகவுக்கு இன்னும் பிளஸ் தான்..!

 அரசு திட்டம்

அரசு திட்டம்

இவ்வளவு திட்டங்கள் திமுகவுக்கு இருந்தாலும், கஜானாவை சுத்தமாக காலி செய்துவிட்டு போயுள்ள கடந்த அதிமுக அரசு.. இப்படிப்பட்ட நிதி சிக்கலில் முக்கிய அறிவிப்புகளை திமுக அறிவிக்குமா என்பது சந்தேகம்தான்.. ஒருவேளை அறிவித்தால், அது மிகப்பெரிய சாதனைதான்... லாக்டவுன் முடிந்து, கடைகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டுள்ளன.. அரசின் நிதி நிலைமை அவ்வளவு சீக்கிரம் உயர்ந்தும் விடாது..

 முயற்சிகள்

முயற்சிகள்

இருந்தபோதிலும், முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கானஅறிவிப்புகளை வெளியிடுவதில் முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், கூட்டுறவு கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு ஊக்கதொகை 1000 ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் போன்றவை குறித்த அறிவிப்புகளை வெளியிடவும் முயன்று கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இன்னொன்றையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. நடந்து முடிந்த சட்டசபையில் ஸ்டாலின் பேசும்போது,
"ஆளுநர் உரை என்பது ஜஸ்ட் டிரைலர்தான்.. முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் என எல்லாத்தையும் இப்பவே சொல்லிவிட முடியாது" என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போயுள்ளார். அதனால், நல்ல அறிவிப்புகளை விரைவில் தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் சொல்வார் என்ற நம்பிக்கை வலுவாகவே உள்ளது.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+