அன்று 14! இன்று 20.. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. இலங்கை தமிழர்களின் மனங்களையும் குளிர்வித்த அரசு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த முறை கொரோனா காலத்தில் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அளித்திருந்தது போல் இந்த 20 தொகுப்புகளும் பொதுமக்களிடையே வரவேற்பை பெறும் என தெரிகிறது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்ககளில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 7 மாதங்களில் நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளதால் திமுக அரசுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா 2ஆவது அலை உச்சத்தில் இருந்தது.

முதல்வர் ஸ்டாலின்
எனினும் சுகாதாரத் துறை, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவால் கொரோனா 2ஆவது அலை ஓய்ந்துவிட்டது என்றே சொல்லலாம். அது போல் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்ததை அடுத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 4000 கொரோனா நிவாரணத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது.

14 பொருட்கள்
அது போல் 14 மளிகை பொருட்களும் கொரோனா கால நிவாரணமாக வழங்கப்பட்டது. அந்த 14 பொருட்களில்
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை - 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
டீ தூள் -200கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு 25 கிராம் - 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
ஆகியவை வழங்கப்பட்டன.

மக்கள் பாராட்டு
இந்த 14 பொருட்களும் தரமானவையாகவே இருந்ததாக பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள். மேலும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத் தொகையை பெற்ற ஏழை பாட்டி ஒருவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தை புகைப்படம் எடுத்த கலைஞருக்கு பாராட்டு தெரிவித்து, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது போல் வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ததும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. அது போல் வெள்ள நிவாரண முகாம்களில் நேரடியாக அவர் ஆய்வு செய்து அங்கு தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ததும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

ரேஷன் அட்டை
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 20 பொருட்கள் துணிப்பையுடன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ. 1088 கோடி நிதியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ஏழைகளின் நாடித் துடிப்பை முதல்வர் ஸ்டாலின் புரிந்து வைத்திருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications