குடியரசு தினம் 2026: மதநல்லிணக்கம் முதல் சிறந்த காவல் நிலையம் வரை.. விருது பெற்றவர்கள் விவரம்
சென்னை: சென்னையில் இன்று நாட்டின் 77-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின விழாவில் விருதுகள் வழங்கி கவுரவித்தார். மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது திருப்பூரை சேர்ந்த கலிமுல்லா என்பவருக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது: தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணிக்கு வழங்கி ஸ்டாலின் கவுரவித்தார். வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான விருது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கருக்கு வழங்கப்பட்டது

சென்னையில் குடியரசு தின விழா
இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று நாடு முழுக்க இந்தியாவின் 77 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

பதக்கங்கள் வழங்கினார் ஸ்டாலின்
இதேபோன்று சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் தமிழகத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். கீழ்க்கண்ட விருதுகளை ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்
* நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர்
* தீயணைப்பு துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்
* கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது
* முதல் பரிசு மதுரை மாநகரம்
* இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்
* மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்

காந்தியடிகள் காவலர் பதக்கம்
* விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்
* விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்
* கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்
* கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்
* சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலிமுல்லா
சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது: தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணிக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.


Click it and Unblock the Notifications
